azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 15 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 15 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Not by work or wealth or progeny, but only by sacrifice can one attain immortality. All the scriptures explain the value of sacrifice. Understand its inner significance and practice it. Devotion should not be confined to visiting temples and saluting God therein. Devotion exists everywhere. Wherever you sit, you can utter the Name of the Lord. There is no place without Love, Love exists everywhere. Some love their mother or father, others their wife or children. There are yet others who love God. Loving God alone is true devotion. The love for any worldly person can at best be selfish – there is no one who loves another person without a selfish reason. God alone loves you without selfishness, expecting nothing in return. Therefore develop faith and devotion to God.( ‘My Dear Students’, Vol 3, Ch 2, Mar 19, 1998)
கர்மாவினாலோ, புத்திரர்களாலோ, தனத்தினாலோ அன்றி, தியாகத்தினால் மட்டுமே ஒருவர் அமரத்துவத்தைப் பெற முடியும். அனைத்து சாஸ்திரங்களும் தியாகத்தின் மதிப்பை விளக்குகின்றன . அதன் உட்கருத்தையும், கடைப்பிடித்தலையும் புரிந்து கொள்ளுங்கள். பக்தியை கோவில்களுக்குச் சென்று அங்குள்ள தெய்வங்களை வணங்குவதோடு மட்டும் நிறுத்தி விடக் கூடாது. பக்தி எங்கும் இருக்கிறது.நீங்கள் எங்கு உட்கார்ந்திருந்தாலும் இறை நாமத்தை உச்சரிக்கலாம்.ப்ரேமை இல்லாத இடமே இல்லை, ப்ரேமை எங்கும் இருக்கிறது. சிலர் தாய் அல்லது தந்தையை ,மற்றும் சிலர் மனைவி அல்லது குழந்தைகளை நேசிக்கிறார்கள்.மேலும் பலர் இறைவனை நேசிக்கிறவர்கள் இருக்கிறார்கள். இறைவனை நேசிப்பதே உண்மையான பக்தி. உலகியலான மனிதர் மீதுள்ள ப்ரேமை அதிக பட்சம் சுயநலமானதே-சுயநலமான காரணமின்றி பிறரை நேசிப்பவர் எவருமில்லை.எந்த எதிர்பார்ப்பும் இல்லாது, சுயநலமின்றி உங்களை நேசிப்பவன் இறைவன் ஒருவனே. எனவே இறைவன் பால் நம்பிக்கையையும், ப்ரேமையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.