azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 14 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 14 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

You often desire that you must have peace. In fact, every being wants peace, but not many have it. They only see pieces everywhere. From where will you get peace? It is present right there, within you. Fill your heart completely with love – then you will merge in the peace present within your heart. There will be no agitation. An agitation-free mind will confer peace on you. What is truth? All that comes out of a loving heart is truth. What is Righteousness (Dharma)? All actions that emerge from thecore of your heart, all actions done out of selfless love is Dharma. Hrud Daya=Hrudaya. Love and Compassion must pervade your heart. Have faith that your heart is your temple and there is no bigger temple than that. In fact it is apermanent and pure place for the Lord, only you have to keep it that way.-( ‘My Dear Students’, Vol 2, Ch 7, Apr 10, 2000.)
நீங்கள் பொதுவாக உங்களுக்கு சாந்தி (peace) வேண்டும் என விரும்புகிறீர்கள். உண்மையில் ஒவ்வொரு ஜீவராசியும் சாந்தியை விரும்புகிறது, ஆனால், பலருக்கு அது கிடைப்பதில்லை.அவர்கள் எல்லா இடத்திலும் peace அல்ல pieces ஐத்தான் பார்க்கிறார்கள். உங்களுக்கு சாந்தி எங்கிருந்து கிடைக்கும்?அது அங்கேயே, உங்களுக்குள்ளேயே இருக்கிறது. உங்கள் இதயத்தை ப்ரேமையால் நிரப்புங்கள்- பின்னர் உங்கள் இதயத்தில் இருக்கும் சாந்தியுடன் ஒன்றரக் கலந்து விடுவீர்கள்.அங்கு கலக்கமே இருக்காது. கலக்கமற்ற மனம் உங்களுக்கு சாந்தியை அளிக்கும்.சத்யம் என்றால் எது? ப்ரேமை நிறைந்த இதயத்தில் இருந்து வரும் அனைத்தும் சத்யமே. தர்மம் என்றால் என்ன?இதயத்தின் அடித் தளத்திலிருந்து எழும் அனைத்து செயல்களும்,தன்னலமற்ற ப்ரேமையின் மூலம் செய்யப்படும் அனைத்து செயல்களும் தர்மமே. ஹ்ருத் தயா = ஹ்ருதயம். ப்ரேமையும், கருணையும் உங்கள் இதயத்தில் வியாபித்திருக்க வேண்டும்.உங்கள் இதயமே உங்கள் கோவில் என்ற நம்பிக்கை கொண்டு இருங்கள்;மேலும் அதை விடப் பெரிய கோவில் எதுவும் இல்லை. அதுவே இறைவனுக்கான நிரந்தரமான, தூய்மையான உறைவிடமாகும்;அதை நீங்கள் தான் அவ்வாறு வைத்திருக்க வேண்டும்.