azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 11 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 11 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

In the Bhagavad Gita, the Lord declares, “Whenever righteousness (Dharma) declines, I make My advent in the world.Dharmawill never perish.” It is the practice ofDharmawhich is becoming weaker day by day, and notDharmaas such. Many times clouds cover the Sun. In such a scenario, the people on earth may not be able to see the Sun. Just because people cannot see, does it mean that the Sun doesn’t exist? No, Sun exists! Temporarily the Sun is hidden by the clouds; therefore people are unable to see it. Nobody can say that the Sun has perished, can they? Similarly, Sathya and Dharma have the effulgence of the Sun. Truth is the Sun,Dharmais the effulgence of the Sun. They are interdependent like matter and energy. Matter and energy cannot exist without each other. Similarly Sun and its radiance are reflection of each other.Sathya, the Sun andDharma, its effulgence redeem the world.(‘My Dear Students’, Vol 3, Ch 2.)
ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான்,''எப்போதெல்லாம் தர்மம் குறைகிறதோ,நான் இவ்வுலகில் அவதாரம் எடுக்கிறேன். தர்மம் என்றும் அழியாது.'' என பறைசாற்றுகிறார்.தர்மத்தைக் கடைப்பிடிப்பது தான் நாளுக்கு நாள் குறைந்து வருகிறதே அன்றி, தர்மமே குறைந்து விடவில்லை.பல சமயங்களில் மேகங்கள் சூரியனை மறைக்கின்றன.இப்படிப் பட்ட சூழ்நிலையில் பூமியில் உள்ள மக்கள் சூரியனைக் காண முடிவதில்லை.மக்களால் காண முடியவில்லை என்பதால் சூரியனே இல்லை என்று ஆகி விடுமா? இல்லை, சூரியன் இருக்கத் தான் செய்கிறான்!தாற்காலிகமாக சூரியன் மேகங்களால் மறைக்கப் படுகிறான்; அதனால் தான் மனிதர்களால் அவனைக் காண முடிவதில்லை.யாராவது சூரியன் அழிந்து விட்டான் என்று சொல்ல முடியுமா?அதைப் போலவே, சத்யமும் தர்மமும் சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டவை.சத்யமே சூரியன் தர்மமே அதன் பிரகாசம்.அவை இரண்டும் பொருள் மற்றும் சக்தியைப் போன்று ஒன்றை ஒன்று சார்ந்தவை. பொருளும் , சக்தியும் ஒன்று இல்லாமல், மற்றொன்று இருக்க முடியாது.அதைப் போலவே, சூரியனும் அதனது பிரகாசமும், ஒன்று மற்றொன்றின் பிரதிபலிப்பே.சத்யம் என்ற சூரியனும்,தர்மம் என்ற அதன் பிரகாசமும் இவ்வுலகைக் காக்கின்றன.