azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 10 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 10 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

All materials in this world will disappear after some time. The principle ofAtmaalone is imperishable. What is the Atmic Principle? That which pervades the entire body isAtma. You should try to broaden your mind by which you can merge in Divine Consciousness. For example, take a balloon and blow it. It grows bigger and bigger. As it gradually increases size, it also becomes thinner. After a point it becomes so thin than it bursts. Where does the air in that balloon go? It merges with the air outside, which is present everywhere. Thus conscience merges with the consciousness which is present everywhere. This is referred to as liberation, the final goal or emancipation. You can give it many names; they are not important. The goal is important. You must try to achieve this unity with Consciousness, and you can attain this by practising spirituality at all times with all your determination.(‘My Dear Students’, Vol 2, Ch 7, Apr 10, 2000)
இந்த உலகில் உள்ள அனைத்துப் பொருட்களும், சில காலத்திற்குப் பிறகு மறையத் தான் போகின்றன.ஆத்ம தத்துவம் ஒன்றே அழிவற்றது. ஆத்ம தத்துவம் என்பது எது? உடலனைத்திலும் பரவியுள்ளது எதுவோ அதுவே ஆத்மா. நீங்கள் பரப்ரம்மத்துடன் ஒன்றரக் கலப்பதற்கு உங்களது மனதை விசாலமாக்கிக் கொள்ள வேண்டும்.உதாரணத்திற்கு,ஒரு பலூனை எடுத்து அதை ஊதுங்கள்.அது உப்பி பெரிதாகிக் கொண்டே போகிறது.அது அளவில் பெரிதாக ஆக ஆக மெல்லியதாகவும் ஆகி விடுகிறது.ஒரு குறிப்பிட்ட அளவிற்குப் பிறகு அது மிகவும் மெல்லியதாக ஆகி வெடித்து விடுகிறது.அந்த பலூனில் உள்ள காற்று எங்கு சென்றது?அது வெளியில் எங்கும் பரவி வியாபித்து இருக்கும் காற்றுடன் கலந்து விடுகிறது. இவ்வாறு ஜீவாத்மா , எங்கும் வியாபித்து இருக்கும் பரமாத்மாவுடன் ஒன்றரக் கலந்து விடுகிறது. இதுதான் சுதந்திரம்,இறுதியான இலக்கு அல்லது விடுதலை எனப்படுகிறது. நீங்கள் அதற்குப் பல பெயர்கள் சூட்டலாம். அந்த இறுதி இலக்கு அல்லது லக்ஷியமே பிரதானம்.நீங்கள் அந்த பரப்ரம்மத்துடன் ஒன்றரக் கலக்க முயற்சி செய்ய வேண்டும்;எல்லாக் காலங்களிலும் ,உங்களது அனைத்து மன உறுதியுடன் ஆன்மீகத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் இதை அடையலாம்.