azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 05 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 05 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Prayer is for the mind, just as food is for the body. Wholesome food gives health and strength to the body. Prayer purifies your mind and strengthens your spirit. Ifbhajansare done in an ostentatious manner, ego gets bloated. Young people must proceed fromtamas, the darkness of ignorance, totapas, spiritual austerities. Be steadfast in pursuing whatever you choose. There is no point in doing meditation for two days and giving up on the third day. If you start practicing meditation, it must become an integral part of your life. You cannot assume you are meditating by merely closing your eyes. You must progress until you feel united with the God present within your heart. Along with meditation, you must acquire the knowledge and skills to lead your professional life. You must always maintain the same discipline and strength of character, wherever you are.(‘My Dear Students’, Vol 2, Ch 5, Mar 11, 1984)
உடலுக்கு உணவு எப்படியோ,அவ்வாறே மனதிற்கு பிரார்த்தனை.பூரணமான உணவு உடலுக்கு போஷாக்கையும் ,சக்தியையும் அளிக்கிறது.பிரார்த்தனை மனதை தூய்மைப் படுத்தி,ஆத்மாவை வலுப்படுத்துகிறது.பஜனை படாடோபமாகச் செய்யப் பட்டால்,அஹங்காரம் உப்பிப் பெரிதாகிறது. இளைஞர்கள் அறியாமை இருள் எனும் ''தமஸிலிருந்து'', ஆன்மீக விரதங்களான ''தவத்திற்கு''ச் செல்ல வேண்டும்.நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும் அதை நிலையாக அனுசரியுங்கள்.இரண்டு நாள் தியானம் செய்து விட்டு , மூன்றாம் நாள் அதை விட்டு விட்டால் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் தியானம் செய்யத் தொடங்கினால், அது உங்களது வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆக வேண்டும்.உங்கள் கண்களை வெறுமனே மூடிக் கொண்டு இருப்பதால் மட்டுமே நீங்கள் தியானம் செய்து கொண்டு இருக்கிறீர்கள் என எடுத்துக் கொள்ள முடியாது.உங்கள் இதயத்துள் உறையும் இறைவனோடு, நீங்கள் ஒன்றரக் கலக்கும் உணர்வைப் பெறும் வரை நீங்கள் முன்னேற வேண்டும். தியானத்துடன் கூடவே, உங்களது தொழிலியலான வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையான அறிவு மற்றும் திறன்களை நீங்கள் பெற வேண்டும்.நீங்கள் எங்கு இருந்தாலும் , எப்போதும் அதே கட்டுப் பாடு மற்றும் நல்லொழுக்கத்தைக் கடைப் பிடிக்க வேண்டும்.