azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 04 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 04 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

We often say, “I am performing all actions in this world for the sake of God”. Is it real? Are you doing all the tasks to please God, or is it for your own self? Contemplate on this. Every devotee (Sadhaka) does many different activities, for their own sake and not for the sake of God. Listening, singing the glory of the Lord, chanting His name, serving the divine feet, salutation, worship, servitude, friendship and Self-surrender – all these nine forms of devotion, are for your own good, and not for God’s benefit. Consider this example. You are eating an apple. Is it for the benefit of the apple, that you are eating it? No, it is for your own health! Similarly your actions, worship or meditation is only for your own happiness and satisfaction. The only thing God cares for is purity and steadfastness. Purity in thought, word and actions is all that matters to God. (Divine Discourse, Vol 2, Ch 5, Apr 10, 2000)
நாம் பலமுறை,'' நான் இந்த உலகத்தில் எல்லாச் செயல்களையும் இறைவனுக்காகவே செய்கிறேன்'"' என்று கூறுகிறோம்.இது உண்மைதானா? நீங்கள் அனைத்து செயல்களையும் இறைவனை மகிழ்விப்பதற்காகச் செய்கிறீர்களா அல்லது உங்களுக்காகவா?இதைப் பற்றிச் சிந்தியுங்கள். ஒவ்வொரு ஆன்மீக சாதகரும் பல விதமான செயல்களை தங்களுக்காகச் செய்கிறார்களே அன்றி,இறைவனுக்காக அல்ல.ஸ்ரவணம்( கேட்பது), கீர்த்தனம்( இறைவனது புகழைப் பாடுவது),ஸ்மரணம்( இறை நாமத்தை நினைவு கூறுவது), பாத ஸேவனம்( இறைவனது மலரடிக்குச் சேவை ஆற்றுவது), வந்தனம் (இறைவனை வணங்கித் தொழுவது),அர்ச்சனம் ( அவனை அர்ச்சித்து பூஜிப்பது), தாஸ்யம் (அவனுக்கு சேவனாகப் பணி ஆற்றுவது), ஸாக்யம் ( அவனை நண்பனாக ஏற்பது) ஆத்ம நிவேதனம் ( அவனை பரிபூரண ஸரணாகதி அடைவது)- இந்த ஒன்பது விதமான பக்தியும், உங்களது நலனுக்காகவே அன்றி, இறைவனுக்காக அல்ல. இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.நீங்கள் ஒரு ஆப்பிள் பழத்தைச் சாப்பிடுகிறீர்கள். ஆப்பிளின் நன்மைக்காகவே நீங்கள் அதைச் சாப்பிடுகிறீர்கள்? இல்லையே, அது உங்களது நலனுக்காகத் தானே! அதைப் போலவே, உங்களது செயல்கள்,வழிபாடுகள் அல்லது தியானம் ஆகியவை உங்களது சந்தோஷம் மற்றும் திருப்திக்காகத் தான். இறைவன் கவனிப்பது எல்லாம் தூய்மை மற்றும் தளராத நம்பிக்கையை மட்டும் தான்.எண்ணம், சொல், மற்றும் செயலின் தூய்மையை மட்டுமே இறைவன் பொருட்படுத்துகிறான்.