azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 03 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 03 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Meditation is not merging the form in your mind. It is merging your mind with the Form, so that the mind doesn’t exist. There are three stages in this process – TheOoha(imagining the Form),Bhava(experiencing the Divine) and finallySakshatkara(Realization). In the initial stages, the devotee imagines one’s favourite Divine Form, as they have seen before. Over time, the image vanishes in the mind and they begin experiencing the Form. This process takes longer and slowly, the devotee starts experiencing the Lord from the toe to the head. The impressions last longer and grow deeper and gradually, the image of the Lord that is firmly implanted becomes an inner reality. While the imagining stage gives only momentary joy, the experiencing stage results in complete identification of the seeker with the Lord. Thus, over time, awareness of the Divine results in oneness with the Divine (Brahmavid Brahmaiva Bhavathi). (Divine Discourse, Vol 2, Ch 5, Mar 11, 1984.)
தியானம் என்றால் இறைவனது ரூபத்தை மனதுடன் ஒன்றரக் கலப்பது அல்ல. மனதை இறை ரூபத்துடன் ஒன்றரக் கலந்துவிடச் செய்து மனமற்ற நிலையை எய்துவது தான்.இந்த முறையில் மூன்று நிலைகள் உள்ளன. ஒன்று ஊகம் (இறை ரூபத்தைக் கற்பனை செய்வது ), இரண்டாவது பாவம் ( தெய்வீகத்தை அனுபவிப்பது ) , இறுதியில் சாக்ஷாத்காரம் (ஒன்றரக் கலப்பது). ஆரம்ப நிலைகளில் ஒரு பக்தன்,அவன் முன்பே பார்த்த தனது இஷ்ட தெய்வத்தின் ரூபத்தை கற்பனை செய்கிறான்.சில காலத்திற்குப் பின், அந்த இறை ரூபம் மனதில் மறைந்து அவன் அந்த ரூபத்தை அனுபவிக்கத் தொடங்குகிறான்.இந்த முறைக்கு அதிக காலம் பிடிக்கிறது; மெதுவாக பக்தன் இறைவனை அடி முதல் தலை வரை உணர ஆரம்பிக்கிறான். இந்த மனப் பதிப்புக்கள் அதிக நேரம் நிலைப்பதோடு, ஆழமாக வளர்ந்து, படிப்படியாக, உறுதியாக வேறூன்றி விட்ட இறைவனது அந்த ரூபம் உள்ளார்ந்த சத்யமாகி விடுகிறது. கற்பனை செய்யும் நிலை கண நேர சந்தோஷத்தை அளிக்கிறது; ஆனால் அனுபவிக்கும் நிலை ஆன்மீக சாதகனை, தன்னை முழுமையாக இறைவனுடன்அடையாளம் கண்டு கொள்ள வைக்கிறது.இவ்வாறு,சில காலத்தில்,இறை உணர்வு , இறைவனோடு ஒன்றரக் கலப்பதில் முடிகிறது.