azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 01 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 01 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

During meditation, care must be taken to keep the back straight and steady without bending forward or backward or sideward. If you bend or move, misdirection of highly potent energy (Kundalini) can occur resulting in mental derangement. Also wear loose clothes. Your eyes must concentrate on the tip of the nose. They must be half-open, so you are neither distracted nor falling asleep. Free your mind from bad thoughts and fill it with sacred ones. To achieve this, you must control your senses. Your ears must be trained to listen only to noble and elevating ideas, and to eschew evil speech and gossip. Your eyes must be tuned to see the Divine. The restless mind must be restrained by making it concentrate on inhalation and exhalation while incessantly repeating theMantra,‘So-Ham’(I am He). Through these postures and activities, your life-breath is controlled and this will ensure that the great power ofYogais revealed unto you.(Divine Discourse, 'My Dear Students', Vol 2, Ch 5, Mar 11 1984).
தியானத்தின் போது,முதுகை முன்னோ,பின்னோ,பக்கவாட்டிலோ சாய்க்காமல், நேராக, நிலையாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் குனிந்தாலோ,அசைந்தாலோ, மிகவும் சக்தி வாய்ந்த குண்டலினீ சக்தியின் தவறான திசை மாற்றத்தினால் பைத்தியம் பிடிக்க நேரிடலாம். மேலும் தொள தொளப்பான ஆடைகளை அணியுங்கள்.உங்கள் கண்கள் மூக்கின் நுனியில் மனதை குவிக்க வேண்டும்.நீங்கள் தடுமாறாமலும், தூங்கி விடாமலும் இருப்பதற்காக அவை பாதி திறந்திருக்க வேண்டும். மனதிலிருந்து தீய எண்ணங்களை நீக்கி,அதை புனிதமான எண்ணங்களால் நிரப்புங்கள். இதை அடைய,நீங்கள் புலன்களை அடக்க வேண்டும். உங்கள் காதுகள் சீரிய மற்றும் உயர்ந்த கருத்துக்களை மட்டுமே கேட்க வேண்டும்; மேலும் தீய பேச்சு மற்றும் வம்பைத் தவிர்க்க வேண்டும்.உங்கள் கண்கள் தெய்வீகத்தையே காணும்படி இசைவு கொள்ள வேண்டும். அலை பாயும் மனதை, இடையறாது '' ஸோஹம்'' ( நான் இறைவனே ) என்ற மந்திரத்தை ஜபித்துக் கொண்டே,சுவாசத்தில் ஒரு முனைப் படுத்துவதன் மூலம் கட்டுப் படுத்த வேண்டும்.இந்த ஆஸன மற்றும் அப்பியாசங்களின் மூலம்,உங்களது பிராணன் கட்டுப் படுத்தப் படுகிறது; மேலும் தலை சிறந்த யோக சக்தி உங்களுக்கு வெளிப்படுவதை இது உறுதி செய்யும்.