azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 28 Feb 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 28 Feb 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

The chief objective of allSadhana(spiritual striving) is to eliminate the mind, to becomeA-manaska. Then illusion will disappear and Reality will be revealed. During the dark fortnight of the month,Sadhanamust be done to eliminate a fraction of the mind each day; for, every day, a fraction of the Moon is shrinking. OnChathurdasi(the 14th night), the night of Shiva, only a fraction of the moon remains. If some special effort is made that night, through more intensive and vigilantSadhana, likepuja,japam,dhyana(ritual worship & meditation), success is ensured. Hence, Shiva must be meditated upon that night, every month, without the mind straying towards thoughts of sleep or food. Once a year, on Mahashivaratri, a special spurt of spiritual activity is recommended, so that theShavam(corpse) can becomeShivam(God), through perpetual awareness of its Divine Indweller. Dedicate the vigil of this Shivaratri night to the Shiva present within each one of you. (Divine Discourse, Shivarathri, 1969).
அனைத்து ஆன்மீக சாதனைகளின் தலையாய குறிக்கோள் மனதை அழித்து, மனமற்றவராக ( அமனஸ்கா ) ஆவதே.பின்னர் மாயை மறந்து,உண்மை நிலை வெளிப்படும்.தேய்பிறையான அரை மாதத்தின் ஒவ்வொரு நாளும் எவ்வாறு நிலவின் ஒரு சிறு பகுதி தினமும் தேய்ந்து கொண்டே வருகிறதோ, அவ்வாறே மனதின் ஒரு சிறிய பகுதியை தினமும் நீக்குவதற்காக, ஆன்மீக சாதனையைச் செய்ய வேண்டும்.சிவராத்திரியான 14ம் நாளில் நிலவின் ஒரு சிறு பகுதிதான் மிஞ்சி இருக்கும்.அன்று இரவு ஒரு சிறப்பான முயற்சியாக அதி தீவிரமான மற்றும் விழிப்புணர்வு கொண்ட ஆன்மீக சாதனைகளான பூஜை,ஜபம்,தியானம் ஆகியவற்றை மேற்கொண்டால்,வெற்றி உறுதியாகிறது. ஒவ்வொரு மாதத்தின் அந்த இரவில்,மனம் உறக்கம் அல்லது உணவைப் பற்றிய எண்ணங்களில் ஈடுபடாமல்,சிவனைக் குறித்து தியானம் செய்ய வேண்டும். வருடம் ஒருமுறை,மஹா சிவராத்திரி அன்று,உள்ளுறையும் தெய்வீகத்தை இடையறாது தியானிப்பதன் மூலம் சவம் ஆன மனிதன் சிவமான இறைவனாக மாறுவதற்கு, தனிப்பட்ட உத்வேகமான ஆன்மீக சாதனை அறிவுறுத்தப் படுகிறது.சிவராத்திரி இரவில் விழித்திருந்து ஆன்மீக சாதனை செய்வதை,உங்கள் ஒவ்வொருவர் உள்ளும் உறையும் சிவனுக்கு அர்ப்பணம் செய்யுங்கள்.