azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 26 Feb 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 26 Feb 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Bear in mind the company you keep. The great saint-poet Kabir once said, “I salute the bad and also the good”. Kabir was asked, “We understand you offering salutations to the good, but why do you salute the bad?” He responded, “When I salute the bad, I am doing this with a prayer to remove themselves from my presence; I am saluting the good, requesting their presence before me.” This is a profound statement. You must avoid bad company and cultivate the company of good. When you join with good people, you will be happy and you will confer happiness upon others. Strive to get rid of all your bad thoughts. Give up all your negative traits. Discharge your obligations to your parents. Render selfless service to the community. Redeem your lives by earning the Grace of the Lord. This is My blessing to all of you. (Divine Discourse, 'My Dear Students', Vol 2, Ch 3, Dec 29, 1985)
உங்களது நட்பு வட்டத்தைப் பற்றி கவனமாக இருங்கள். தலை சிறந்த கவி முனிவரான கபீர்தாஸர் ஒரு முறை கூறினார்,'' நான் தீயவர்களை வணங்குகிறேன்; நல்லவர்களையும கூட வணங்குகிறேன்''. '' நீங்கள் நல்லவர்களுக்கு நமஸ்காரம் செய்வது எங்களுக்குப் புரிகிறது; கெட்டவர்களை ஏன் வணங்குகிறீர்கள்?'' எனக் கபீர் கேட்கப் பட்டார். அதற்கு அவர்,'' நான் தீயவர்களை வணங்கும் போது அவர்கள் என்னிடமிருந்து தாங்களாகவே விலக வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் செய்கிறேன். அவர்கள் என் முன் இருக்க வேண்டும் என வேண்டி நல்லவர்களை வணங்குகிறேன் '' என பதிலளித்தார். இது ஒரு மகத்தான கூற்றாகும்.நீங்கள் தீயவர்களின் நட்பைத் தவிர்த்து, நல்லவர்களின் நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.நல்லவர்களுடன் இணையும்போது, நீங்கள் சந்தோஷமாக இருப்பதுடன் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறீர்கள். உங்களது தீய எண்ணங்களை எல்லாம் விட்டொழிக்கப் பாடுபடுங்கள்.உங்களது எதிர் மறையான மனப்பாங்குளை கைவிடுங்கள். உங்களது பெற்றோர்களுக்கான கடமைகளை ஆற்றுங்கள். சமுதாயத்திற்கு தன்னலமற்ற சேவையை ஆற்றுங்கள்.இறை அருளைப் பெறுவதன் மூலம் உங்களது வாழ்வை மேம்படுத்திக் கொள்ளுங்கள். இதுவே உங்கள் அனைவருக்கும் எனது ஆசிகளாகும்.