azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 22 Feb 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 22 Feb 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Test is a taste of God. Unless you are tested, your determination will not become strong. Students often write three or four tests in a year. Why? Exams are not to trouble them, but to validate and strengthen their understanding of the subject. When they pass in flying colours, they are either promoted to higher classes or gain admission to very good Universities. God also does the same. Hence, welcome tests, not as a punishment, but as a protection. However hard they may be, you must clear it. Then you will definitely attain a higher state. God already knows who you are, but He may test you in order to set an ideal for others. What you see is one and what God sees is another. God tests you so all your sins and shortcomings are washed away. Just as gold is tested and attested for its purity, God’s tests are always for strengthening your courage, patience, determination and devotion.(Divine Discourse, 'My Dear Students', Vol 2, Ch 4, Apr 22, 2000)
பரீட்சை,இறைவனுக்குச் சுவையானவை.நீங்கள் பரீட்சிக்கப் படவில்லை என்றால், உங்களது மனத்திண்மை வலிமையானதாக ஆகாது.மாணவர்கள் ஒரு வருடத்தில் மூன்று அல்லது நான்கு பரீட்சைகளை எழுதுகிறார்கள்.ஏன்? பரீட்சைகள் அவர்களைத் துன்புறுத்துவதற்காக அல்ல. பாடங்களை அவர்கள் புரிந்து கொண்டதை உறுதி செய்து,அவற்றை வலிமை உள்ளதாக ஆக்கத்தான்.அவர்கள் சிறப்பாகத் தேர்வு பெற்றால்,மேல் வகுப்புகளுக்கு உயர்த்தப் படுகிறார்கள் அல்லது சிறந்த பல்கலைக் கழகங்களில் சேர அனுமதி பெறுகிறார்கள்,இறைவனும் அவ்வாறே செய்கிறான்.எனவே, தண்டனைகளாக அன்றி பாதுகாப்பாகக் கருதி, சோதனைகளுக்கு வரவேற்பு அளியுங்கள். எவ்வளவு கடுமையானவையாக இருந்தாலும்,அவற்றில் நீங்கள் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும்.பின்னர் நீங்கள் உயர் நிலையை அடைவீர்கள்.நீங்கள் யார் என்பதை இறைவன் அறிவான்;ஆனால் மற்றவர்களுக்கு ஒரு இலட்சியமாக எடுத்துக் காட்ட,உங்களை அவன் சோதிக்கலாம்.நீங்கள் காண்பது ஒன்று,இறைவன் காண்பது மற்றொன்று.உங்களது அனைத்து பாவங்களையும், குறைகளையும் தீர்ப்பதற்காக இறைவன் உங்களை சோதிக்கிறான். எவ்வாறு தங்கம் சோதிக்கப் பட்டு அதன் தூய்மை உறுதி செய்யப்படுகிறதோ,அவ்வாறே, இறைவனது சோதனைகளும் உங்களது தைரியம், பொறுமை,மனத்திண்மை மற்றும் பக்திக்கு வலிமை ஊட்டுவதற்காகவே.