azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 18 Feb 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 18 Feb 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Many people try to doHata Yogaor developKundalini Shakthiand so on. Some invoke evil spirits to harm others. These forms of spiritual practices are notSatwik. God is the Eternal Absolute (Sat) and the individual is Consciousness(Chit). When these two (SatandChit) merge, you have bliss(Ananda). Your spiritual practices must help you to realise this bliss(Sat-chit-ananda). Only such practices deem to be calledSadhana. Where is God(Sat)? God is present in everyone. So always be prepared to serve everyone, regarding them as Divine. Your spiritual practices(Sadhana)must help you cultivate the feeling of Universal Love and adoration for the Divine who embraces everyone. There is no higher spiritual practice than the cultivation of Love. Hence, intensify your spiritual practices in the spirit that the one God pervades the many forms in the Universe. (Divine Discourse, 'My Dear Students', Vol 2, Ch 3.)
பலர் ஹடயோகம் செய்ய முயல்வது அல்லது குண்டலினீ சக்தியைப் பெருக்கிக் கொள்வது போன்ற பலவற்றைச் செய்கிறார்கள்.சிலர் பிறருக்குத் தீங்கு இழைப்பதற்காக துர்தேவதைகளை எழச் செய்கிறார்கள்.இவ்வகையான ஆன்மீக சாதனைகள் ஸாத்வீகமானவை அல்ல,இறைவன் (ஸத்) என்ற பாரமாத்மா, தனி மனிதன் ( சித் ) என்ற ஜீவாத்மா.இந்த இரண்டும் ( ஸத் மற்றும் சித்) ஒன்றரக் கலக்கும் போது,உங்களுக்கு ஆனந்தம் கிடைக்கிறது. உங்களது ஆன்மீக சாதனைகள்,நீங்கள் இந்த ஸச்சிதானந்தத்தைப் பெற உதவ வேண்டும். இப்படிப் பட்ட பயிற்சிகளே சாதனா என அழைக்கத் தக்கவையாகும். இறைவன் ( ஸத்) எங்கு இருக்கிறான்? இறைவன் ஒவ்வொருவர் உள்ளும் உறைகிறான்.எனவே,ஒவ்வொருவரையும் இறைவனாகவே கருதி அவர்களுக்கு சேவை செய்ய விழையுங்கள்.உங்களது ஆன்மீக சாதனைகள், நீங்கள் பிரபஞ்சமயமான அன்பையும் மற்றும் ஒவ்வொருவரையும் அரவணைக்கும் தெய்வீகத்தை போற்றும் உணர்வையும் வளர்த்துக் கொள்ள உதவி புரிய வேண்டும். ப்ரேமையை வளர்த்துக் கொள்வதை விட உயர்ந்த ஆன்மீக சாதனை எதுவுமில்லை. எனவே, ஒரே இறைவன் தான்,இந்த பிரபஞ்சத்தின் பல வடிவங்களில் வியாபித்துள்ளான் என்ற உணர்வுடன் உங்களது ஆன்மீக சாதனைகளை தீவிரப் படுத்துங்கள்.