azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 15 Feb 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 15 Feb 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Do not think that God is at some distant place. He is with you, nearer than your most beloved family. Develop good qualities. Be a part of the society by undertaking noble activities. God (Bhagawan) does not expect anything from you nor does He need anything. All He cares for is your good reputation. The body is bound to perish. No one can escape death, even if they hide themselves in a forest. Do not worry about it. Continuously develop virtues as they will remain with you and protect you always. Use your discrimination, but this should not be individual discrimination, but be discrimination at the societal and universal level. Only then truth and right conduct will prevail. This should be the barometer for your conduct. (Divine Discourse, 'My Dear Students', Vol 2, Ch 1.)
கடவுள் தொலைதூரத்தில் உள்ள ஏதோ ஒரு இடத்தில் இருக்கிறார் என்று எண்ணாதீர்கள். அவர், உங்களது அன்பிற்குரிய குடும்பத்தினரை விட மிக அருகில், உங்களுடனேயே இருக்கிறார். நற்குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். சீரிய செயல்களை ஆற்றுவதன் மூலம் சமுதாயத்தின் ஒரு அங்கமாகத் திகழுங்கள். இறைவன் உங்களிடமிருந்து எதையும் எதிர் பார்ப்பதும் இல்லை அல்லது அவருக்கு எதுவும் தேவையும் இல்லை.அவர் மதிப்பது எல்லாம் உங்களது நற்புகழை மட்டும் தான்.இந்த உடல் அழியத் தான் போகிறது. அவர்கள் ஒரு காட்டில் ஒளிந்து கொண்டால் கூட, எவரும் இறப்பைத் தவிர்க்க இயலாது.அதைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். தொடர்ந்து நல்லொழுக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அவை உங்களுடனேயே இருந்து உங்களை எப்போதும் காத்திடும். தனிப்பட்ட நிலையில் அல்லாது சமுதாய மற்றும் பிரபஞ்சமயமான நிலையில் .உங்களது பகுத்தறிவைப் பயன்படுத்துங்கள். அப்படி இருந்தால் தான் சத்தியமும் , தர்மமும் நிலைத்து நிற்கும். இதுவே உங்களது நடத்தையின் அளவு கோலாக இருத்தல் வேண்டும்.