azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 06 Feb 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 06 Feb 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

The word ‘Health’ is derived from the Anglo-Saxon word ‘Helig’ meaning holistic or wholeness of the spirit. You are made up of sense organs, mind, intellect, consciousness and the indwelling spirit. ‘Wholeness’ includes all these elements. Your mind should be in a state of fullness; there should be no room for confusion or depression. To achieve such a state of mind, it is necessary to connect with the Divine and understand the situation. For instance, students should not get depressed if they did not score as well as they expected or perhaps failed in an examination. Instead, they should examine the reasons for the result – whether they studied well or understood the subject correctly. If the conclusion is inadequate preparation, then the resolve should be to do better in the next opportunity. You must develop your moral and mental strength by practicingSadhanafor disciplining the mind and achieve holistic wellbeing.(Divine Discourse, 'My Dear Students', Vol 2, Ch 1, Dec 29, 1985.)
" Health",என்ற ஆங்கில வார்த்தை " Helig" (அதாவது '' பூரணமான அல்லது முழுமையான ஆத்மா '') என்ற மூலச் சொல்லிலிருந்து பெறப்பட்டது.நீங்கள் புலன்கள்,மனம்,புத்தி,உணர்வு மற்றும் உள்ளுறையும் ஆத்மாவினால் உருவாக்கப் பட்டவர்கள்.''முழுமை'' என்பது இவை அனைத்தையும் உள்ளடக்கியது.உங்கள் மனம் பூரணமான நிலையில் இருத்தல் வேண்டும்;குழப்பத்திற்கோ அல்லது மன அழுத்தத்திற்கோ இடம் அளிக்கக் கூடாது. இப்படிப் பட்ட மன நிலையைப் பெறுவதற்கு நீங்கள் தெய்வீகத்துடன் இணைந்து இருந்து, சூழ்நிலையைப் புரிந்து இருக்க வேண்டும். உதாரணமாக, மாணவர்கள் அவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கா விட்டாலோ அல்லது தேர்வில் தோல்வி அடைந்தாலோ, மனச்சோர்வு அடைந்து விடக் கூடாது.மாறாக அவர்கள் தோல்விக்கான காரணங்களை, அதாவது -அவர்கள் நன்றாகப் படித்தார்களா அல்லது பாடங்களைச் சரிவரப் புரிந்து கொண்டார்களா போன்றவை- ஆராய வேண்டும். காணப்படும் காரணம் தாயாரிப்பு போதுமானதாக இல்லை என அறிந்தால், அடுத்துக் கிடைக்கும் வாய்ப்பில், நன்றாகச் செய்வோம் என்ற உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மனதைக் கட்டுப் படுத்துவதற்கான ஆன்மீக சாதனையைக் கடைப் பிடிப்பதன் மூலம் ஒழுக்க மற்றும் மன வலிமையைப் பெருக்கிக் கொண்டு, பூரணமான நலனைப் பெற வேண்டும்.