azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 03 Feb 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 03 Feb 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Truth is that, which does not change with time. A policeman wears his uniform and performs his duty. When you see him, you think that is the truth. After his duty, he goes home and changes to a night-dress. Now too he is a policeman! Though the clothes he wore has changed, his body does not change. Similarly, ‘Dehi’ your indweller, does not undergo any change. Your body is associated withSatvik,RajasikandTamasikqualities. Remove them and you will see the divine ‘Brahman’. In a cold hill station, you wear vest, shirt and then a protective coat on top of it. If you want to see your heart (chest), you must remove your coat, shirt and vest; only then you can see your heart. Similarly, the body of a human being is covered with many qualities. When you go beyond these, you will be able to see the Divine in your heart.(Divine Discourse, “My Dear Students”, Vol 2, Ch 1.)
காலத்தால் மாறாதது எதுவோ, அதுவே ஸத்யம்.ஒரு போலீஸ்காரர் தனது காக்கி உடையை அணிந்து கொண்டு,தனது கடமையைச் செய்கிறார்.நீங்கள் அவரை அப்போது பார்க்கும் போது,அதுதான் ஸத்யம் என்று நினைக்கிறீர்கள். தனது வேலை முடிந்தவுடன் அவர் தன் வீட்டிற்குச் சென்று, இரவு உடையில் மாறுகிறார்.இப்போது கூட அவர் போலீஸ்காரர் தான்!அவர் அணிந்து கொள்ளும் உடை மாறுகிறதே தவிர,அவரது உடல் மாறுவதில்லை.அதைப் போலவே,உள்ளுறையும் ஆத்மா ( தேஹி ),எந்த மாற்றமும் அடைவதில்லை. உங்களது உடல் ஸத்வ,ரஜோ மற்றும் தமோ குணங்களுடன் சம்பந்தப் பட்டது. அவற்றை நீக்கி விடுங்கள்;நீங்கள்,'' பரப்ரம்மனை''க் காண்பீர்கள். குளிரான மலைப் பிரதேசத்தில்,நீங்கள்பனியன்,சட்டை மற்றும் அதன் மேல் ஒரு பாதுகாப்பான கோட் அணிந்து கொள்கிறீர்கள்.உங்களது மார்பைக் காண வேண்டும் என்றால்,உங்களது கோட், சட்டை மற்றும் பனியனை எடுக்க வேண்டும்; அதன் பின்னர் தான் உங்களது இதயத்தைக் காண முடியும்.அதைப் போலவே, மனித உடலும் பல குணங்களால் மூடப்பட்டு இருக்கிறது. இவற்றை எல்லாம் தாண்டிச் சென்றால் தான்,உங்கள் இதயத்தில் உள்ள தெய்வீகத்தை உங்களால் காண முடியும்.