azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 24 Jan 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 24 Jan 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

In this world, you must perform both great deeds and good deeds. The vagaries of modern life are rather mysterious and beyond understanding. They are called ‘Dushta Chathushtayam or Akara Chatushtayam’ (Evil Quartet) which comprise of: Lack of faith (Avishwasam), doubt (Anumanam), jealousy (Asuya) and ego (Ahamkaram). Lack of good character makes one develop bad thinking. Lack of faith leads to doubt. Today, many people are ready to trust a stranger on the street but refuse to believe the scriptures and noble commandments of great saints or their own parents. They do not believe even in the words of those that love and care for them. Be aware of these pitfalls and develop good conduct. For good conduct, truth and righteousness are essential. Undertake meritorious deeds with noble motives and immerse yourself in the feeling of love.(Divine Discourse, 'My Dear Students', Vol 2, Ch 1.)
இந்த உலகில் நீங்கள் மகத்தான செயல்கள் மற்றும் நல்ல செயல்கள் என்ற இரண்டையும் ஆற்ற வேண்டும்.நவீன வாழ்க்கையின் கோளாறுகள் மர்மமானதும், புரிந்து கொள்ள இயலாததும் ஆக உள்ளன.இவற்றை,''நான்கு துஷ்டங்கள் ( துஷ்ட சதுஷ்டயம்) அல்லது தீய நான்கு( அகார சதுஷ்டயம்)'' எனலாம்; இவையே நம்பிக்கையின்மை(அவிஸ்வாஸம்), சந்தேகம், (அனுமாணம்), பொறாமை ( அஸூயை), மற்றும் இறுமாப்பு(அஹங்காரம்). நல்லொழுக்கமின்மை, ஒருவர் தீய எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுமாறு செய்கிறது. நம்பிக்கையின்மை,சந்தேகத்திற்கு இட்டுச் செல்கிறது.இன்று, மனிதர்கள் தெருவில் சந்திக்கும் முன் பின் தெரியாதவரைக் கூட நம்பத் தயாராக இருக்கிறார்களே தவிர,சாஸ்திரங்களையும்,உயர்ந்த முனிவர்களின் சீரிய அறிவுரைகளையும் அல்லது தங்களது சொந்தப் பெற்றோர்களையும் கூட நம்ப மறுக்கிறார்கள்.இந்த படுகுழிகளில் விழுந்து விடாமல் இருப்பதில் கவனமாக இருந்து,நல்லொழுக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நன்னடத்தை,சத்யம் மற்றும் தர்மம் ஆகியவை இன்றியமையாதவை.சீரிய நோக்கங்களுடன் உயர்ந்த செயல்களை ஆற்றி,உங்களை ப்ரேமை உணர்வில் ஆழ்த்திக் கொள்ளுங்கள்.