azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 21 Jan 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 21 Jan 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Meditation does not mean sitting cross-legged (inPadmasana) with eyes closed in contemplation of God. This is physical, worldly activity. No doubt, this is needed, but true meditation lies in unifying the mind with God. Just as milk and water cannot be separated, likewise, the mind, once merged with God, cannot be separated. Likewise, your love should become one with Divine love. Some people contemplate on God for a limited period in the morning and evening. This cannot be called meditation. You must contemplate on God at all times, at all places and under all circumstances. Perform all tasks with your mind firmly fixed on God. That is true meditation. Thinking of God for a limited period is only part-time devotion. Part-time devotion entitles you to only part-time grace. You should have full-time devotion in order to attain grace in full measure. (Divine Discourse, Aug 22, 2000.)
தியானம் என்றால்,பத்மாஸனத்தில்,கண்களை மூடிக் கொண்டு,இறைவனை எண்ணுவது என்று அர்த்தமல்ல. இது உடல் சம்பந்தப் பட்ட,உலகியலான செயல்.சந்தேகத்திற்கு இடமின்றி,இது தேவை தான்;ஆனால்உண்மையான தியானம் என்பது மனதை இறைவனுடன் ஒன்றரக் கலப்பதில் தான் உள்ளது. எவ்வாறு பாலையும்,நீரையும் அவை ஒரு முறை கலந்து விட்டால் தனித் தனியாகப் பிரிக்க முடியாதோ,அவ்வாறே மனம் ஒரு முறை இறைவனுடன் ஒன்றரக் கலந்து விட்டால், அதைத் தனியாகப் பிரிக்க முடியாது.அதைப் போலவே, உங்களது ப்ரேமையும்,தெய்வீக ப்ரேமையுடன் ஒன்றரக் கலந்து விட வேண்டும்.சிலர் காலையிலும், மாலையிலும்,ஒரு குறிப்பிட்ட நேரம் வரை இறைவனைக் குறித்து தியானம் செய்வார்கள். இதை தியானம் எனக் கூற முடியாது. நீங்கள் இறைவனைக் குறித்து,ஸதா ஸர்வ காலமும்,ஸகல இடங்களிலும், ஸகல சந்தர்ப்பங்களிலும் தியானிக்க வேண்டும். மனதை இறைவன் மீது நிலையாகப் பதித்துக் கொண்டு உங்களது அனைத்து செயல்களையும் ஆற்றுங்கள். அதுவே உண்மையான தியானம்.ஒரு குறிப்பிட்ட நேரம் வரை இறைவனை தியானிப்பது என்பது ஒரு பகுதி நேர பக்தி போன்றது.ஒரு பகுதி நேர பக்திக்கு, ஒரு பகுதி நேர இறையருள் தான் கிட்டும்.இறையருளை முழுமையாகப் பெறுவதற்கு,நீங்கள் முழு நேர பக்தி உடையவர்களாக இருக்க வேண்டும்.