azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 20 Jan 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 20 Jan 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Recognize the Divine within yourself. Open the doors of your heart. Develop love more and more. Understand the truth. Experience God. There lies the bliss. Make every effort to understand the immanent Divinity. The Divinity within you is covered by ego and anger. Therefore, real knowledge dawns when attachment is destroyed (Moham hithva punar vidya). Where does this attachment come from? Excessive desires lead to attachment. You may attain temporary peace by undertaking repetition of the name (Japa), meditation (dhyana), andyoga. To attain permanent peace, you must develop love within. Love can turn earth into sky and sky into earth. This sacred love is within you. But, you direct it in the wrong direction and thereby it gets perverted. Develop the sacred Love within you to realise your innate Divinity.(Divine Discourse, Mar 14, 1999.)
உங்களுள் உள்ள தெய்வீகத்தை உணருங்கள்.உங்களது இதயத்தின் கதவுகளைத் திறந்து வையுங்கள்.ப்ரேமையை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள். சத்தியத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.இறைவனை அனுபவியுங்கள். அதில் தான் ஆனந்தம் இருக்கிறது.உள்ளுறையும் தெய்வீகத்தைப் புரிந்து கொள்ள அனைத்து முயற்சியும் செய்யுங்கள். உங்களுள் உள்ள தெய்வீகத்தை அஹங்காரமும்,கோபமும் மூடிக் கொண்டு இருக்கின்றன. எனவே, உண்மையான அறிவு,மோஹம் அல்லது பற்றுதல் அழியும் போது தான் உதயமாகிறது.(மோஹம் ஹித்வா புனர் வித்யா). பற்றுதல் எங்கிருந்து வருகிறது?அளவு மீறிய ஆசைகள் பற்றுதலுக்கு இட்டுச் செல்கின்றன.ஜபம், தியானம் மற்றும் யோகம் செய்வதால் நீங்கள் தாற்காலிகமான சாந்தியைப் பெறக் கூடும்.நிரந்தரமான சாந்தியைப் பெற, நீங்கள் உள்ளார்ந்த ப்ரேமையை வளர்துக் கொள்ள வேண்டும். ப்ரேமை ஆகாயத்தை பூமியாகவும்,பூமியை ஆகாயமாகவும் மாற்ற வல்லது.இந்தப் புனிதமான ப்ரேமை உங்களுள் இருக்கிறது. ஆனால் நீங்கள் அதை தவறான திசையில் திருப்பி விடுவதன் காரணமாக அது வக்கிரமானதாக ஆகி விடுகிறது. உள்ளுறையும் புனித அன்பை வளர்த்துக் கொள்வதன் மூலம் அந்தராத்மாவின் தெய்வீகத்தை உணருங்கள்.