azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 13 Jan 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 13 Jan 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Life on earth is possible only because of the Sun. For mankind that is caught up in a meaningless existence and going through an endless round of futile activities, the Sun God stands out as an exemplar of tireless and selfless service. He enjoys no respite from work. He is above praise and censure. He carries on his duties with absolute equanimity. Everything he does is only for the wellbeing of the world and not for causing any harm. Thus the Sun God teaches us the supreme example of humble devotion to duty, without any conceit. Everyone must learn how to do their duties with devotion and dedication, just like the Sun. Doing one's duty is the greatestYoga(Spiritual path), as pointed out by Krishna in the Gita. Hence, let your actions and thoughts be good. You will then experience the bliss divine.(Divine Discourse, Jan 15, 1992)
சூரியன் இருப்பதால் மட்டுமே பூமியில் வாழ்க்கை சாத்தியமாகிறது. அர்த்தமற்ற வாழ்க்கை மற்றும் முடிவில்லாத வீண் வேலைகள் என்ற சூழலில் சிக்கித் தவிக்கும் மனித குலத்திற்கு,சூரிய பகவான் ஓய்வற்ற மற்றும் தன்னலமற்ற சேவையின் தலை சிறந்த உதாரணமாகத் திகழ்கிறான். வேலையிலிருந்து ஓய்வு என்பதே அவனுக்கு இல்லை. அவன் புகழ்ச்சி மற்றும் இகழ்ச்சிக்கு அப்பாற் பட்டவராக இருக்கிறான். அவன் தனது கடமைகளை முழுமையான சமநிலையோடு ஆற்றுகிறான். அவன் செய்யும் ஒவ்வொன்றும் உலக நன்மைக்காக மட்டுமே அன்றி எந்தத் துன்பமும் விளைவிப்பதற்காக அல்ல. இவ்வாறு சூரிய பகவான், எந்த இறுமாப்பும் இன்றி பணிவான பக்தியுடன் கடமை ஆற்றுவதன் தலை சிறந்த உதாரணத்தை அறிவுறுத்துகிறான். ஒவ்வொருவரும், சூரியனைப் போல, தங்கள் கடமைகளை பக்தி, சிரத்தையுடன் எப்படி ஆற்றுவது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீமத் பகவத் கீதையில் சுட்டிக் காட்டுவதைப் போல ஒருவர் தனது கடமையை ஆற்றுவதே மிகச் சிறந்த யோகமாகும். எனவே, உங்களது செயல்களும், எண்ணங்களும் நல்லவையாக இருக்கட்டும்.நீங்கள் பின்னர் தெய்வீக ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள்.