azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 11 Jan 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 11 Jan 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Although there may be differences among nations in their food and habits, the spirit of harmony and unity displayed in sports is a gratifying example to all. It is a distinctive quality of sports that differences are forgotten and persons engage themselves in games in a divine spirit of camaraderie. Sports help the players not only to improve their health but also to experience joy. However, you should not be content with realising these benefits alone. You have another body besides the physical; it is the subtle body, otherwise known as the mind. It is equally essential to promote purity of the mind and develop large heartedness. True humanness blossoms only when the body, the mind and the spirit are developed harmoniously. The enthusiasm and effort you display in sports should also manifest in the spheres of morality and spirituality.(Divine Discourse, Jan 14, 1990)
தேசங்களுக்குள் அவர்களது உணவு மற்றும் பழக்க வழக்கங்களில் வித்தியாசங்கள் இருந்த போதும்,விளையாட்டுப் போட்டிகளில் காணப்படும் ஒற்றுமையும்,இசைவும் அனைவருக்கும் மனநிறைவைத் தருகின்றன. வேற்றுமைகளை மறந்து, மனிதர்கள் தெய்வீக நட்பு உணர்வுடன் விளையாட்டுகளில் ஈடுபடுவது, விளையாட்டுப் போட்டிகளின் தனிச் சிறப்பாகும். விளையாட்டுக்கள், வீரர்கள் தங்களது ஆரோக்கியத்தை அபிவிருத்தி செய்ய உதவுவதோடு,ஆனந்தத்தையும் அனுபவிக்கச் செய்கின்றன. ஆனால் மனம் இந்தப் பயன்களைப் பெறுவதோடு மட்டும் நீங்கள் நின்று விடக் கூடாது.இந்த பௌதீகமான உடலைத் தவிர உங்களுக்கு மற்றும் ஒரு உடல் உள்ளது; அதுவே, மனம் என்று அழைக்கப் படும் சூக்ஷ்ம சரீரம். மனத்தூய்மையைப் பேணி விசால மனப்பாங்கினை வளர்த்துக் கொள்வது அதே அளவு அத்தியாவசியமானதாகும். உண்மையான மனிதத்துவம் உடல்,மனம் மற்றும் ஆத்மா என்ற மூன்றும் இசைவுடன் வளரும் போது தான் பரிமளிக்கிறது.விளையாட்டுகளில் நீங்கள் காட்டும் உத்ஸாகத்தையும், உழைப்பையும் நன்னடத்தை மற்றும் ஆன்மீகத் துறைகளிலும் கூட வெளிப்படுத்த வேண்டும்.