azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 10 Jan 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 10 Jan 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Difficulties and pain help one to nurse and build the capacity for patience and forbearance. However, due to mental weakness and ignorance, people invariably shun painful experiences and distress. Do not be weak; be brave and welcome troubles. Let them come; more the merrier. Only with such a courageous attitude can you bring out thekshama(forbearance) hidden within you. Can you get promoted to a higher class without passing an examination? It is only when you secure the prescribed marks and pass the examination, you are declared eligible to advance to the higher class. While preparing for the examination you have to face stress and many difficulties but how sweet the promotion is! So welcome troubles as tests that prepare you for higher things and be happy when troubles descend on you, because that is whenkshamatruly blossoms.(Divine Discourse, May 25, 2000.)
துன்பங்களும்,துயரமும் ஒருவருக்கு பொறுமை மற்றும் சகிப்புத் தன்மைக்கான திறனைப் பேணி, வளர்த்துக் கொள்வதற்கு உதவுகின்றன.ஆனால்,மன பலஹீனம் மற்றும் அறியாமையால் மனிதர்கள் துன்பம் தரும் அனுபவங்களையும், துயரத்தையும் பொதுவாக விலக்கவே செய்கின்றனர். பலஹீனமாவர்களாக இருக்காதீர்கள்; தைரியசாலிகளாக, கஷ்டங்களுக்கு வரவேற்பு அளியுங்கள். அவைகள் வரட்டும்;எவ்வளவு அதிகம் வருகின்றவோ அவ்வளவு நல்லது.இப்படிப்பட்ட தைரியமான மனப்பாங்கு இருந்தால் மட்டுமே, உங்களுள் மறைந்து இருக்கும் சகிப்புத் தன்மையை வெளிக் கொண்டு வர முடியும்.ஒரு பரீட்சையில் தேர்வு பெறாமல் நீங்கள் உயர் வகுப்புக்களுக்கு எவ்வாறு செல்ல முடியும்? குறிப்பிட்ட அளவு மதிப்பெண்களைப் பெற்று,பரீட்சையில் தேர்வு பெற்றால் தான்,நீங்கள் உயர் வகுப்புகளுக்கு முன்னேறத் தகுந்தவர் என்று அறிவிக்கப் படுகிறீர்கள். தேர்வுக்குத் தயாராகும் போது நீங்கள் மன அழுத்தத்தையும்,துன்பங்களையும் எதிர்கொள்ள வேண்டி இருந்தாலும்,உயர்வு கிட்டும் போது எவ்வளவு இனிமையாக இருக்கிறது! எனவே,கஷ்டங்களை, உயர்வான விஷயங்களுக்காக உங்களைத் தயார் செய்யும் பரீட்சைகளாக வரவேற்று, துன்பங்கள் சூழும் போது மகிழ்ச்சி கொள்ளுங்கள்;ஏனெனில்,அப்போது தான் சகிப்புத் தன்மை உண்மையில் மலருகிறது.