azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 06 Jan 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 06 Jan 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

The flower of forbearance (kshama) is very dear to the Lord. The Pandavas suffered a lot at the hands of the Kauravas. But it was the virtue of forbearance that protected the Pandavas and made them an ideal to the rest of the world. The other flower that we must offer to God isShanti(peace). One should remain peaceful through all the vicissitudes of life. Only then can one attain divine grace. Peace is needed at the physical, mental and spiritual levels. Peace is not external, it is present within. You are the embodiment of peace. In the worldly life, there are bound to be many hardships, but one should not be perturbed. One should bear all sufferings with fortitude and patience. Human life is given not merely to enjoy the worldly pleasures. Life becomes meaningful only when one experiences the peace that originates from the heart.(Divine Discourse, Aug 22, 2000)
பொறுமை என்னும் புஷ்பம் இறைவனுக்குப் பிரியமான ஒன்று. பாண்டவர்கள் கௌரவர்களால் மிகவும் துன்புறுத்தப் பட்டார்கள்.ஆனால், பொறுமை என்னும் நற்குணம் பாண்டவர்களைக் காத்து அவர்களை, இந்த உலகிற்கு எல்லாம் இலட்சிய மனிதர்களாக ஆக்கியது.இறைவனுக்கு நாம் அர்ப்பணிக்க வேண்டிய இன்னோரு புஷ்பம் சாந்தி.வாழ்வின் ஏற்றத் தாழ்வுகள் எல்லாவற்றிலும் ஒருவர் சாந்தியுடன் இருக்க வேண்டும். அதன் பின்னரே ஒருவர் இறை அருளைப் பெற முடியும். சாந்தி என்பது உடல்,மனம் மற்றும் ஆன்மீக நிலைகளில் இருத்தல் வேண்டும். சாந்தி என்பது வெளியில் இல்லை, அது நமக்குள்ளேயே இருக்கிறது.நீங்களே சாந்தியின் திருஉருவம் தான்.உலக வாழக்கையில்,கஷ்டங்கள் இருக்கத் தான் செய்யும், ஆனால் ஒருவர் அதனால் கலங்கி விடக் கூடாது. அனைத்து துன்பங்களையும் மனோபலத்துடனும், பொறுமையுடனும் சகித்துக் கொள்ள வேண்டும்.மனித வாழ்க்கை உலக சுகங்களை அனுபவிப்பதற்காக மட்டுமே கொடுக்கப் பட்டதல்ல. இதயத்திலிருந்து எழும் சாந்தியை ஒருவர் அனுபவித்தால் மட்டுமே, வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது.