azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 05 Jan 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 05 Jan 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

If you happen to see a wicked person, do not immediately think of that person as being bad. The bad actions of that person are due to the body, but within that person is the same Atma that is also in you. This unity, this Atmic Principle, is what you must focus on. Deal with this other person with the feeling that the Self in you is also present in the other. This is the way to develop love for all beings. Also do not bear ill will towards any country but be alike to all. Do not criticise the culture of other countries. Love your culture as your mother, just as people of other lands love their respective cultures. If you live like this, you will, without question, become an ideal person. You must spiritualise your attitude, tendencies, and mind.(Divine Discourse, May 30, 2000.)
நீங்கள் ஒரு தீய மனிதனைப் பார்த்தால், உடனே அவர் கெட்டவர் என எண்ணாதீர்கள். அந்தத் தீய மனிதர்களின் கெட்ட செயல்கள் அனைத்தும் உடலின் காரணமாகவே;ஆனால்,அந்த மனிதருள் இருக்கும் ஆத்மாவும், உங்களுள் இருக்கும் ஆத்மாவும் ஒன்றே. இந்த ஒற்றுமை, இந்த ஆத்ம தத்துவமே, நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. உங்களுள் உள்ள ஆத்மாவே மற்றவர் உள்ளும் உள்ளது என்ற உணர்வுடன்,இந்த மனிதரைக் கையாளுங்கள். அனைத்து ஜீவராசிகளுடன் அன்பை வளர்த்துக் கொள்வதற்கான வழி இதுவே. அதைப் போலவே, எந்த நாட்டின் மீதும் த்வேஷம் கொள்ளாது,அனைவரிடமும் ஒரே மாதிரி நடந்து கொள்ளுங்கள். மற்ற நாடுகளின் கலாசாரத்தை விமரிசனம் செய்யாதீர்கள்.மற்ற தேசங்களில் இருப்பவர்கள் தத்தம் காலசாரங்களை நேசிப்பதைப் போலவே, உங்களது கலாசாரத்தையும் தாயைப் போல நேசியுங்கள்.நீங்கள் இப்படி வாழ்வீர்களானால், கேள்விக்கு இடமின்றி, நீங்கள் ஒரு இலட்சிய மனிதராவீர்கள். உங்களது மனப்பாங்கு,உணர்வுகள் மற்றும் மனதை ஆன்மீகமானதாக, நீங்கள் ஆக்கிக் கொள்ள வேண்டும்.