azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 03 Jan 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 03 Jan 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Your speech should always be good. Never utter harsh words. Speak softly and sweetly. That is why I tell you often, “You cannot always oblige, but you can always speak obligingly.” Say what you have to say without harshness. Speak softly so that only the person for whom your words are intended may hear you. Such soft and sweet speech should be developed. Good vision, good listening, and good speech lead to good thoughts. “As are your thoughts, so is the result.” Right thoughts lead to right action. Without good thoughts, it is not possible to perform good actions. Good thoughts cannot be acquired by reading scriptures or by listening to the teachings of the preceptor. Through self-effort you should put your senses of sound, touch, form, taste, and smell to right use. Your self-effort alone can ensure proper spiritual practice (Divine Discourse, Apr 28, 1999.)
உங்களது பேச்சு எப்போதும் நல்லதாகவே இருக்க வேண்டும்.ஒருபோதும் கடுமையான வார்த்தைகளைக் கூறாதீர்கள்.இதமாவாகவும்,இனிமையாகவும் பேசுங்கள்.அதனால் தான் நான் அடிக்கடிக் கூறுகிறேன்,''நீங்கள் எல்லாச் சமயங்களிலும் உதவ முடியாமல் போகலாம், ஆனால் இதமாகப் பேசுங்கள்.'' நீங்கள் என்ன கூற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ,அதை கடுமை இல்லாமல் கூறுங்கள்.யாருக்காக உங்கள் வார்த்தைகள் இருக்கின்றனவோ, அவருக்கு மட்டுமே கேட்கும் அளவிற்கு,மிருதுவாகப் பேசுங்கள்.இப்படிப் பட்ட இதமான,இனிமையான பேச்சை வளர்த்துக் கொள்ள வேண்டும்.நல்ல பார்வை,நன்கு கேட்டுக் கொள்ளும் திறன்,நல்ல பேச்சு ஆகியவை நல்ல எண்ணங்களுக்கு இட்டுச் செல்கின்றன. '' எண்ணங்கள் எப்படியோ, விளைவுகள் அப்படியே ''. சரியான எண்ணங்கள், சரியான செயல்களுக்கு இட்டுச் செல்கின்றன.நல் எண்ணங்கள் இல்லாமல் ,நற்காரியங்களைச் செய்ய முடியாது. சாஸ்திரங்களைப் படிப்பதாலோ அல்லது குருவின் உபதேசங்களைக் கேட்பதாலோ,நல்ல எண்ணங்களைப் பெற முடியாது.சுய முயற்சியின் மூலம் நீங்கள் உங்களது புலன்களான ஒலி,தொடு உணர்வு,உருவம்,சுவை மற்றும் மணம் ஆகியவற்றை சரியான வழியில் பயன்படுத்த வேண்டும். உங்களது சுய முயற்சி மட்டுமே சரியான ஆன்மீக சாதனையை உறுதி செய்ய முடியும்.