azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 27 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 27 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

The most important requisite for people in the world is truth based on noble thoughts. True thoughts constitute the real, proper wealth. The absence of good thoughts weakens the will power. With a weak will, one can not accomplish even simple things. To achieve anything worthwhile in life you must strengthen your willpower. Your bad or good fortune is related directly to your thoughts. Sowing the seed of thoughts you reap the fruit known asKarma(deeds). Sowing the seed ofKarma, you then reap the fruit called practice (Abhyaasa). From Abhyaasa, you reap the fruit of character (Sheela). FromSheelayou reap the fruit of good fortune (Adrushtam). Thus fortune is based on character, which is based on good practices arising out of good deeds based on good thoughts. Thus with the development of good thoughts, one's good fortune will also grow.(Divine Discourse, Dec 25, 1994)
உலகிலுள்ள மனிதர்களுக்கு அத்தியாவசிமாக இருக்க வேண்டியது சத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட சீரிய எண்ணங்களே. சீரிய எண்ணங்களே உண்மையான நியாமான செல்வமாகும். நல்ல எண்ணங்கள் இல்லாமல் இருப்பது மன உறுதியை பலஹீனமாக்குகிறது. வலுவற்ற மன உறுதியால்,ஒருவர் சாதாரணமான விஷயங்களைக் கூட அடைய இயலாது. வாழ்க்கையில் உருப்படியாக எதையும் சாதிக்க வேண்டும் என்றால்,நீங்கள் உங்களது மன உறுதியை வலுப்படுத்த வேண்டும்.உங்களது அதிர்ஷ்ட, துரதிருஷ்டங்கள் நேரடியாக உங்கள் எண்ணங்களைப் பொறுத்ததே. எண்ணங்கள் என்ற விதைகளை நட்டு கர்மா என்ற பழத்தை அறுவடை செய்கிறீர்கள்.கர்மா என்ற விதையை நட்டு,அப்யாஸம் என்ற பழத்தைப் பெறுகிறீர்கள்.அப்யாஸத்திலிருந்து சீலம் என்ற குணநலன்களைப் பெறுகிறீர்கள். சீலத்திலிருந்து,அதிர்ஷ்டம் என்ற கனியைப் பெறுகிறீர்கள். இவ்வாறு, அதிர்ஷ்டம், சீலத்தையும், சீலம் நல்ல எண்ணங்களின் அடிப்படையில் ஆற்றப்படும் நற்செயல்களிலிருந்து தோன்றும், நற்பழக்கங்களையும் ஆதாரமாகக் கொண்டது. இவ்வாறு, நல்ல எண்ணங்களின் வளர்ச்சியால்,ஒருவரது நல் அதிர்ஷ்டமும் பெருகும்.