azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 25 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 25 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Today we celebrate the birthday of Jesus Christ. Jesus taught that you should seek the Kingdom of Heaven and to enter that Kingdom, you must cultivate loving hearts. Then your hearts would become the Kingdom of Heaven. When Jesus was born in the manger, three kings were led by a star to His place of birth. One of them, seeing the infant Jesus observed: "This Child will be a lover of God." The second said: "No, God will love Him." The third one said: "Verily He is God Himself." The significance of these three statements is - "To love God is to be His Messenger." To be loved by God is to be a son of God and finally, as Jesus Himself said: "I and My Father are one." Be aware that all of you are messengers of God. All of you are Children of God. So be free from selfishness and manifest the qualities of the Divine Father from today.(Divine Discourse, Dec 25, 1994.)
இன்று நாம் ஏசு கிருஸ்துவின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம்.ஏசு கிருஸ்து ,நாம் சொர்க்க சாம்ராஜ்யத்தை நாட வேண்டும் என்றும்,அந்த சாம்ராஜ்யத்தில் நுழைய வேண்டும் என்றால், அன்பான இதயங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் போதித்தார்.பின்னர் உங்கள் இதயமே சொர்க்க சாம்ராஜ்யம் ஆகிவிடும்.ஏசு கிருஸ்து மாட்டுத் தொழுவத்தில் பிறந்த போது, மூன்று அரசர்கள் ஒரு நக்ஷத்திரத்தினால் அவர் அவதரித்த இடத்திற்கு இட்டுச் செல்லப் பட்டார்கள். அவர்களில் ஒருவர் குழந்தை ஏசுவைப் பார்த்தவுடன், ''இந்தக் குழந்தை இறைவனை நேசிப்பவனாக இருப்பான்'' என்று கூறினார். இரண்டாமவர்,'' இறைவன் இவனை நேசிப்பார்''என்றார். மூன்றாமவர்,'' இவரே இறைவன்'' என்றார்.இந்த மூன்று கூற்றுகளின் முக்கியத்துவம் என்ன என்றால்- '' இறைவனை நேசிப்பது என்றால் அவரின் தூதராக இருப்பது; இறைவனால் நேசிக்கப் படுவது என்றால் '' இறைவனின் மகனாக இருப்பது'';இறுதியில் ஏசு கிருஸ்துவே கூறியதைப் போல, '' நானும் என் தந்தையும் (இறைவன்) ஒன்றே'' என்பதாகும்.நீங்கள் அனைவருமே இறைவனின் தூதவர்கள் தான் என்பதை உணர்ந்திருங்கள்.நீங்கள் அனைவருமே இறைவனின் குழந்தைகளே. எனவே, இன்றிலிருந்து சுயநலத்தை விடுத்து,அந்த தெய்வீகத் தந்தையின் குணநலன்களை வெளிப்படுத்துங்கள்.