azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 24 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 24 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

You should broaden your heart that it may be filled with all-embracing love. Only then can the sense of spiritual oneness of all mankind be experienced. Out of that sense of unity will be born the love of God. This love will generate in the heart pure bliss that is boundless, indescribable and everlasting. For all forms of bliss, love is the source. A heart without love is like a barren land. Foster love in your hearts and redeem your lives. Whatever your scholarship or wealth, they are valueless without love. Sow the seed of love in your hearts and it will grow in due course into a big tree. God is one. Do not entertain any differences of religion, creed or caste. Carry the message of unity to every home. Embodiments of love! Regard Love as your life-breath and as the sole purpose of your existence.(Divine Discourse, Dec 25, 1994.)
அனைத்தையும் அரவணைக்கும் அன்பினால்,உங்கள் இதயம் நிரம்புவதற்கு ஏற்றவாறு உங்கள் இதயத்தை விசாலமாக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்னரே, அனைத்து மனித குலத்தின் ஆன்மீக ஒருமை உணர்வை, அனுபவிக்க முடியும்.இந்த ஒற்றுமை உணர்விலிருந்து தான் இறைவன் பால் ப்ரேமை பிறக்கும்.இந்த ப்ரேமை, இதயத்தில் அளவற்ற,விவரிக்க இயலாத, நிரந்தரமான பேரானந்தத்தை உருவாக்கும். அனைத்து விதமான ஆனந்தங்களுக்கும் அன்பே ஆதாரம். அன்பற்ற இதயம் வரண்ட நிலம் போன்றதாகும்.உங்கள் இதயத்தில் அன்பைப் பேணி,உங்களது வாழ்க்கையை மீட்டுக் கொள்ளுங்கள். உங்களது பாண்டித்யம் மற்றம் செல்வம் எப்படிப் பட்டதாக இருந்தாலும், அன்பில்லை என்றால் அவை மதிப்பற்றவையே. உங்கள் இதயத்தில் அன்பெனும் விதையை இடுங்கள்;அது விரைவில் பெரிய மரமாக வளரந்து விடும்.இறைவன் ஒருவனே.மத.ஜாதி,குல பேதங்களைப் பாராட்டாதீர்கள். ஒற்றுமையின் அறிவுரையை வீடு,வீடாக எடுத்துச் செல்லுங்கள். அன்பின் வடிவங்களே!அன்பை உங்களது உயிர் மூச்சாகவும், உங்களது வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாகவும் கொள்ளுங்கள்.