azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 22 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 22 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Teachers should never curse their pupils, whatever the provocation. They must always bless them. The teacher who swears like a boor, reduces oneself to the level of a boor. They should watch their own behavior rigorously and find out whether there is some habit or trait, which if imitated by the student, will be harmful. They should themselves follow the advice they give. Otherwise, they will be teaching hypocrisy to the little children and encourage them to acquire the cunningness of not being caught when doing wrong. It is sheer mental weakness and cowardice that allows hypocrisy to develop. If you have the courage to face the consequences you will never utter falsehood. The teacher should not try to rule through the easier means of fear, for that is full of dangerous consequences for the pupils. They should try rather the path of Love.(Divine Discourse, Nov 25, 1959.)
எவ்வளவு தான் ஆத்திரமூட்டப் பட்டாலும், ஆசிரியர்கள் மாணவர்களை ஒரு போதும் சபிக்கக் கூடாது.அவர்கள் மாணவர்களை எப்போதும் ஆசீர்வதிக்க வேண்டும். பட்டிக்காட்டானைப் போல,ஆத்திரப் படுகின்ற ஆசிரியர் ,அந்தப் பட்டிக்காட்டானது நிலைக்குத் தன்னைக் குறைத்துக் கொள்கிறார்.அவர்கள் தங்களது பழக்க வழக்கங்களைத் தீவிரமாக ஆராய்ந்து, தங்களது பழக்கம் அல்லது சுபாவத்தில் ஏதாவது குறை இருந்து,அதனை மாணவர் பின்பற்றினால், அதனால் தீங்கு விளையுமா எனக் கண்டு பிடிக்க வேண்டும். அவர்கள் தருகின்ற அறிவுரைகளை அவர்களே முதலில் கடைப்பிடிக்க வேண்டும். இல்லை என்றால், அவர்கள் சிறு குழந்தைகளுக்குப் பாசாங்குத் தனத்தைக் கற்பித்து, அவர்கள், தாங்கள் தவறு செய்து விட்டு எவ்வாறு பிடிபடாமல் இருப்பது என்ற குறுக்கு புத்தியை வளர்த்துக் கொள்வதை ஊக்குவிப்பவர்களாக ஆகி விடுவார்கள்.பாசாங்குத் தனத்தை வளரவிடுவது, வெறும் மன பலஹீனமும் கோழைத்தனமும் ஆகும்.விளைவுகளை எதிர் கொள்வதற்கான தைரியம் இருக்குமானால்,நீங்கள் ஒரு போதும் பொய் பேச மாட்டீர்கள். ஆசிரியர், எளிய வழியான பயத்தைக் கொண்டு அடக்குவதை செய்யக் கூடாது,ஏனெனில் , அது முழுவதும் மாணவர்களுக்கு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. மாறாக, அவர்கள் அன்பின் பாதையில் முயற்சி செய்ய வேண்டும்.