azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 21 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 21 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

People suffer from two types of agony - the first one can be allayed through others’ intercession and the second can be allayed only by your own effort. For instance, hunger and thirst can be overcome only when you eat or drink. However much others may eat, will it abate even an iota of your hunger? So too, if your wife, mother or son offers to take an injection on your behalf, can your illness be cured? The hunger and illness of your soul is also the same. You must help yourself. The illness you face today is due to some infection. Your illness is caused by the viruses of desire, anger, greed, delusion, pride, jealousy(Kama, Krodha, Lobha, Moha, MadhaandMathsarya). These viruses prevent your Divinity from shining forth; they cause discontent, worry, grief and pain. You can overcome them by manifesting your inner strength. Do not yield, fight them with the faith that you are eternal and unconquerable.(Divine Discourse, Nov 26, 1964.)
மனிதர்கள் இரண்டு விதமான துன்பங்களினால் வேதனைப் படுகிறார்கள்- ஒருவகை,மற்றவர்களது தலையிடுதலால்,தீர்க்க வல்லவை; இரண்டாவது, உங்களது சொந்த முயற்சியால் மட்டுமே தீர்க்க முடிபவை.உதாரணமாக , பசியும், தாகமும்,நீங்களே உண்டோ அல்லது அருந்தியோ தான் தணிக்க முடிபவை. மற்றவர்கள் எவ்வளவு தான் சாப்பிட்டாலும், உங்களது பசி ஒரு சிறு அளவாவது குறையுமா? அதைப் போல, உங்களது மனைவி,தாய் அல்லது மகன் உங்களுக்குப் பதிலாக மருந்தூசி போட்டுக் கொண்டால், உங்கள் வியாதி குறையுமா?உங்களது ஆத்மாவின் பசியும், பிணியும் அதைப் போன்றதே. நீங்கள் உங்களுக்கே உதவி செய்து கொண்டாக வேண்டும். நீங்கள் இன்று எதிர் கொள்ளும் வியாதி,சில தொற்று நோய்களால் தான் ஏற்படுகின்றன. உங்களது வியாதி, காமம், க்ரோதம், லோபம், மதம், மாத்ஸர்யம் என்ற விஷக் கிருமிகளால் உண்டாகிறது.இந்த விஷக்கிருமிகள் உங்களது தெய்வீகத் தன்மையை ஒளிவிட்டுப் பிரகாசிக்காமல் தடை செய்கின்றன; அவை அதிருப்தி, கவலை,துயரம் மற்றும் துன்பத்தை ஏற்படுத்துகின்றன.நீங்கள் இவற்றை உங்களது ஆத்மசக்தியை வெளிக் கொணர்வதன் மூலம் வெற்றி கொள்ளலாம்.அவற்றிற்கு அடிபணிந்து விடாதீர்கள்;நீங்கள் நிரந்தரமான மற்றும் வெல்ல முடியாதவர்கள் என்ற நம்புக்கையுடன் அவற்றை எதிர்த்துப் போராடுங்கள்.