azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 16 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 16 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

True education will make you divine. Education is not mere knowledge of words; it should broaden the mind. The mereacquisition of degrees is valueless. Character is more important and it can be developed only by taking to the spiritual path. Of what use is an education that does not promote good qualities? Together with academic education you have to acquire wisdom and a sense of right and wrong. Knowledge without wisdom, scholarship without determination, music without melody, learning without humility, a society without discipline, friendship without gratitude, and speech without truth - all these are utterly useless. Hence everyone should seek to follow the correct path. It is not greatness that matters but goodness. Make proper use of your education for the good of society.(Divine Discourse, Nov 22, 1997)
உண்மையான கல்வி உங்களை தெய்வீகமானவர்களாக ஆக்கும்.கல்வி என்பது வார்த்தைகளைப் பற்றிய அறிவு அல்ல;அது மனதை விசாலமானதாக ஆக்க வேண்டும்.வெறும் பட்டங்களைப் பெறுவதனால் மதிப்பு ஏதும் இல்லை.குண நலன்கள் மிகவும் முக்கியமானவை;அவற்றை ஆன்மீக வழியில் செல்வதால் மட்டுமே அபிவிருத்தி செய்ய முடியும்.நற்குணங்களை வளர்க்காத கல்வியினால் என்ன பயன்? பள்ளிப் படிப்புடன் கூடவே,நீங்கள் விவேகத்தையும் பெற்று, நல்லவை எது, தீயவை எது எனப் பகுத்தறியும் உணர்வையும் பெற வேண்டும். விவேகமற்ற அறிவு,மன உறுதியற்ற பாண்டித்யம், இன்னிசையற்ற பாடல், பணிவற்ற படிப்பு,கட்டுப்பாடற்ற சமுதாயம், நன்றியுணர்வற்ற நட்பு, சத்தியமற்ற பேச்சு-இவை அனைத்தும் முழுமையாகப் பயனற்றவையே. எனவே,ஒவ்வொருவரும் சரியான பாதையில் செல்ல விழைய வேண்டும். பெருமை முக்கியமல்ல, நற்குணங்களே முக்கியம். உங்களது கல்வியைச் சமுதாயத்தின் நலனுக்காகச் சரியாகப் பயன் படுத்துங்கள்.