azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 13 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 13 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Every individual, every family, every society and every nation seeks peace in all possible ways. People are perpetually in quest of happiness. But what is the happiness they seek? Is it worldly happiness and transient pleasures? These cannot confer true happiness. Only spiritual happiness can give true happiness. Why have people lost happiness? It is because they are afflicted with insatiable desires. These desires are the cause of various maladies. It is only by limiting desires and thereby eliminating the diseases arising from them that one can secure peace. Every person should strive in every way to achieve peace as the most desirable objective. Embodiments of Love! There is no greater happiness than contentment (Santhosham). There is no penance superior to peace of mind.(Divine Discourse, Feb 13, 1997)
ஒவ்வொரு தனிமனிதனும்,குடும்பமும்,சமுதாயமும்,தேசமும்,எல்லா வகையான வழிகளிலும்,சாந்தியை நாடுகின்றன.மனிதர்கள் ஸதா ஸர்வ காலமும் சந்தோஷத்தைத் தேடிக் கொண்டே இருக்கின்றனர்.ஆனால், அவர்கள் தேடும் சந்தோஷம் எது? உலகியலான சந்தோஷமா அல்லது தாற்காலிக சுகங்களா? இவை உண்மையான சந்தோஷத்தைத் தர முடியாது.ஆன்மீக சந்தோஷமே உண்மையான சந்தோஷத்தைத் தர முடியும்.மனிதர்கள் ஏன் சந்தோஷத்தை இழந்து விட்டார்கள்? ஏனென்றால்,அவர்கள் தணிக்க முடியாத ஆசைகளால் பீடிக்கப் பட்டு இருக்கின்றனர். இந்த ஆசைகளே பலவிதமான துன்பங்களுக்குக் காரணம்.ஆசைகளைக் கட்டுப்படுத்தி,அதன் மூலம் அவைகளால் ஏற்படும் துன்பங்களைத் தீர்ப்பதன் மூலமே, ஒருவர் சாந்தியைப் பெற முடியும்.ஒவ்வொரு மனிதனும், சாந்தியையே, தான் விரும்ப வேண்டிய மிகச் சிறந்த குறிக்கோளாகக் கொண்டு,அதைப் பெற ஒவ்வொரு வழியிலும் பாடுபட வேண்டும். அன்பின் வடிவங்களே!திருப்தியை விடச் சிறந்த சந்தோஷம் எதுவுமில்லை.மன அமைதியை விடச் சிறந்த தவம் எதுவுமில்லை.