azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 12 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 12 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

You are under the mistaken notion that you arerendering serviceto others. You should give up such a feeling. Only then does the service you perform become real service in the strict sense of the term. Service does not merely mean helping others. The best way to love God is to love all and serve all. Your acts of service should be suffused with the spirit of love. Without the positive aspect of love, all service you render becomes negative in nature. All bodies are like bulbs and love is the main switch. Only when the main switch is pressed, will the bodies radiate light and happiness to one and all. You are switching off the main switch and trying to enjoy happiness. It is impossible!Hrid Daya(compassion) =Hridaya(heart). Your heart should be filled with compassion. All your activities should be suffused withlove. There is no strength superior to love.(DivineDiscourse, Jan 1, 2003.)
நீங்கள் ஏதோ பிறருக்குச் சேவை செய்கிறோம் என்ற தவறான அபிப்பிராயத்தில் இருக்கிறீர்கள்.இப்படிப்பட்ட உணர்வை நீங்கள் விட்டு விட வேண்டும். அப்போது தான் நீங்கள் ஆற்றும் சேவை, உண்மையான சேவை என்ற பெயருக்கு உகந்ததாகிறது.சேவை என்பது பிறருக்கு உதவுவது என்பது மட்டுமல்ல.இறைவனை நேசிப்பதற்கான சிறந்த வழி,அனைவரையும் நேசிப்பது மற்றும் அனைவருக்கும் உதவுவதே ஆகும்.உங்களது சேவைப் பணிகள் அனைத்தும் அன்பில் தோய்ந்திருக்க வேண்டும்.அன்பின் சாதகமான பங்கு இல்லாவிடில்,நீங்கள் ஆற்றும் அனைத்து சேவைகளும்,எதிர்மறையான இயல்புடையதாகி விடும்.அனைத்து உடல்களும் மின்விளக்குகள் போன்றவை, அன்பே அவற்றை இயக்கும் மெயின் சுவிட்ச்.மெயின் சுவிட்சைப் போட்டால் தான் அனைத்து உடல்களும் ஒளி விட்டுப் பிரகாசித்து,அனைவருக்கும் ஆனந்தத்தை அளிக்கும்.நீங்கள் மெயின் சுவிட்சை அணைத்து விட்டு, ஆனந்தத்தை அனுபவிக்க முயலுகிறீர்கள்.இது இயலாத காரியமே!ஹ்ருத் தயா = ஹ்ருதயா.உங்கள் இதயம் தயையால் நிரம்பி இருக்க வேண்டும்.உங்களது அனைத்துப் பணிகளும் அன்பில் தோய்ந்திருக்க வேண்டும்.அன்பை விடச் சிறந்த பலம் எதுவுமில்லை.