azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 10 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 10 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

What is true humanness? You should treat your fellowmen as your own brothers and sisters. You deserve to be called a human being only when you cultivate the spirit of unity. Where there is no unity, there you find enmity and hatred. Consequently, the principle of love is lost altogether. Your foremost duty is to share your love with others. Only then can you realise the dictum: ‘Brotherhood of man and fatherhood of God’. You may or may not believe in the fatherhood of God, but you must have faith in the brotherhood of man; practise it and experience bliss therefrom. It is only when we share our love with our fellowmen, can we experience Divinity.(Divine Discourse, Oct 17, 2003.)
மனிதத்தன்மை என்றால் என்ன?நீங்கள் உங்களது சக மனிதர்களை, உங்களது சொந்த சகோதர,சகோதரிகளைப் போல நடத்த வேண்டும். ஒற்றுமை உணர்வை வளர்த்துக் கொண்டால் மட்டுமே,நீங்கள் மனிதர்கள் என அழைக்கப்படுவதற்கான தகுதியைப் பெறுகிறீர்கள்.எங்கு ஒற்றுமை இல்லையோ, அங்கு நீங்கள் பகைமையையும்,த்வேஷத்தையும் காண்கிறீர்கள். அதன் காரணமாக,ப்ரேம தத்துவமே முழுமையாக இல்லாமல் போய் விடுகிறது. உங்களது அன்பை மற்றவருடன் பகிர்ந்து கொள்வதே உங்களது தலையாய கடமையாகும்.அதன் பின்னரே, நீங்கள்,''மனதரனைவரும் சகோதரர்களே, இறைவனே அனைவரின் தந்தை'' என்ற தத்துவத்தை உணர முடியும். நீங்கள், இறைவனே அனைவரின் தந்தை என்பதை நம்பலாம் அல்லது நம்பாமல் இருக்கலாம்; ஆனால் மனிதரது சகோதரத்துவத்தில் நம்பிக்கை வைத்து, அதை நடைமுறைப் படுத்தி, அதிலிருந்து கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவித்தே ஆக வேண்டும்.நாம் சக மனிதருடன் நமது அன்பைப் பகிர்ந்து கொண்டால் மட்டுமே,தெய்வீகத்தை உணர முடியும்.