azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 08 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 08 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

The Atmic consciousness that permeates every living being is referred to asBrahman. When it is individualised, it is called conscience. It is also referred to asJiva. When the Atmic consciousness is encased in a body, it becomes an individual. The individual, theAtmaand consciousness - all the three are one and the same. People think they are different because they are given different names. Remove the names, there is only one Consciousness in every individual. Supposing you name this object (showing a handkerchief) asAtma. It is a handkerchief in common parlance. I can call it threads or cotton. But essentially it is an object. Whatever name I may give, it refers to the same one object. There is only one Atmic consciousness in every individual. It has no form; it only assumes different forms.(Divine Discourse, Oct 21, 2003.)
ஒவ்வொரு ஜீவராசிக்குள்ளும் ஊடுருவி உறைந்திருக்கும் ஆத்ம உணர்வே பரப்ரம்மன் எனப்படுகிறது.அது தனிப்பட்ட மனிதருக்குள் மனச்சாட்சி என அழைக்கப்படுகிறது.அது ஜீவாத்மா என்றும் அழைக்கப்படுகிறது.இந்த பரமாத்ம உணர்வு ஒரு உடலுக்குள் உறையும் போது, அது தனிப்பட்ட மனிதனாகிறது. ஜீவன்,ஜீவாத்மா, பரமாத்மா- இந்த மூன்றும் ஒன்றே தான். மனிதர்கள், இவற்றிற்குத் தனித்தனிப் பெயர் இருப்பதால், இவை வெவ்வேறு என நினைக்கிறார்கள்.இந்தப் பெயர்களை அகற்றி விடுங்கள்;ஒவ்வொரு தனி மனிதருள்ளும் இருப்பது ஒரே பரமாத்மாதான். (ஒரு கைக்குட்டையைக் காட்டி), ஒருவேளை இந்தப் பொருளுக்கு, நீங்கள் ஆத்மா எனப் பெயர் வைக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். பொதுவாக இது கைக்குட்டை என அழைக்கப் படுகிறது. இதை இழைகள் அல்லது பருத்தி என நான் அழைக்கலாம்.ஆனால், இது ஒரு பொருள் தானே.நான் எந்தப் பெயரை வைத்தாலும், அது இந்தப் பொருளைத் தானே குறிக்கிறது.ஒவ்வொரு மனிதருள்ளும் இருப்பது ஒரே ஆத்ம தத்துவமே.அதற்கு உருவம் கிடையாது; அது பல உருவங்களை எடுத்துக் கொள்ள மட்டுமே செய்கிறது.