azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 07 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 07 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Love is the eternal principle that is present in all. But people are expressing their love for selfish purposes. You should eschew selfishness and self-interest, and develop the spirit of sacrifice with courage and conviction. How can you become courageous? It is possible only when you practice righteousness (Dharma). Many noble persons have sacrificed their lives for the cause ofDharmaand never craved for name and fame. Sacrifice (Thyaga) is trueYoga. You too should practice thisYogaand become deserving of Divine Grace. Any activity done with a business-mind will not make you happy. Enquire within yourself and develop the spirit of sacrifice. Only then there will be a transformation of heart. So long as you do not give up selfishness, you cannot achieve anything worthwhile in life. You should cast aside selfishness and cultivate selflessness.(Divine Discourse, Nov 22, 2003)
அனைத்திலுள்ளும் நிரந்தரமாக உறைவது ப்ரேம தத்துவமே.ஆனால் மனிதர்கள் அன்பை சுயநலமான காரணங்களுக்காகவே வெளிப் படுத்துகிறார்கள். நீங்கள் சுயநலத்தையும்,சுய தேவைகளையும் கை விட்டு, தியாக மனப்பாங்கினை தைரியத்துடனும்,நம்பிக்கையுடனும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் தைரியசாலிகளாக எவ்வாறு ஆவது? நீங்கள் தர்மத்தைக் கடைப்பிடித்தால் மட்டுமே,அது சாத்தியமாகும். பல மகத்தான மனிதர்கள் பெயர் மற்றும் புகழுக்காக ஒரு போதும் ஆசைப்படாது, தர்மத்திற்காக, தங்களது உயிரையும் தியாகம் செய்திருக்கிறார்கள்.தியாகமே உண்மையான யோகம். நீங்களும் கூட இந்த யோகத்தைக் கடைப்பிடித்து, இறை அருளுக்குப் பாத்திரமாக வேண்டும்.வியாபார நோக்கத்துடன் செய்யப் படும் எந்த செயலும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தராது.சுய ஆய்வு செய்து கொண்டு,தியாக மனப்பாங்கினை வளர்த்துக் கொள்ளுங்கள்.அதன் பின்னரே, மனமாற்றம் ஏற்படும். சுய நலத்தை நீங்கள் விடாத வரை , வாழ்க்கையில் குறிப்பிடும் படியாக எதையும், நீங்கள் சாதிக்க முடியாது. நீங்கள் சுயநலத்தை விட்டு விட்டு, தன்னலமற்ற மனப்பாங்கினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.