azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 05 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 05 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Always remember that your education is not merely to amass wealth or to eke out a livelihood. Money cannot confer true happiness. Do not deviate from Right Conduct (Dharma) for the sake of wealth (Dhana).Dharmais our life; Truth is our breath; and Good Reputation is our wealth. You should not crave for worldly name and fame. Once you practiseDharma, you will naturally attain good reputation.Dharmais related to the heart. Practise ofDharmais termed asRitamwhich will make you immortal. We have today forgotten the great scholars and those who demonstrated great ideals. We should remember people who have sacrificed their life for a noble cause and try to emulate them. It is the spirit of sacrifice that has protected and sustained this country and this Universe for many generations. Offer your lives for the protection ofDharmaand not for amassing wealth. (Divine Discourse, Nov 22, 2003.)
உங்களது கல்வி,செல்வத்தைக் குவிப்பதற்காகவோ அல்லது வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்காகவோ மட்டுமே அல்ல என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். பணம் உண்மையான சந்தோஷத்தைத் தர முடியாது. தனத்திற்காக, தர்மத்தின் பாதையில் இருந்து வழுவி விடாதீர்கள். தர்மமே நமது வாழ்வு;சத்தியமே நமது மூச்சு மேலும் நற்புகழே நமது செல்வம். உலகியலான பெயர் மற்றும் புகழுக்காக அலையாதீர்கள். தர்மத்தை நீங்கள் கடைப்பிடித்தால், இயற்கையாகவே நற்புகழை அடைவீர்கள்.தர்மம் இதய சம்பந்தப் பட்டது. '' ரிதம்'' என அழைக்கப் படும் தர்மத்தைக் கடைப் பிடிப்பது உங்களை என்றும் நிலைத்திருக்கச் செய்யும்.மிகச் சிறந்த பண்டிதர்களையும், தலை சிறந்த கோட்பாடுகளைக் கடைப் பிடித்தவர்களையும் நாம் மறந்து விட்டோம். உன்னதமான காரணங்களுக்காக, உயிர் தியாகம் செய்தவர்களை நாம் நினைவு கூர்ந்து,அவர்களை முன் மாதிரிகளாகக் கொள்ள வேண்டும். தியாக மனப்பாங்கே,இந்த நாட்டையும், இந்தப் பிரபஞ்சத்தையும் பல தலமுறைகளாகக் காத்து, போஷித்து வருகிறது. தனத்தைக் குவிப்பதற்கு அல்லாது, தர்மத்தைக் காக்க உங்களது வாழ்க்கையை அர்ப்பணியுங்கள்.