azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 03 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 03 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Do not consider prayer and meditation (japamanddhyanam) as the pastime of ‘freaks, geeks and cracks’. Hold fast to them, for they alone can save you from ruin. Offer to the Lord, not flowers got in exchange for a few coins or rupees from the shop, but the fragrant flowers of your own virtues. Let tears of joy be the holy water with which you seek to wash the feet of the Lord. Consider the Lord you adore, be it Hanuman or Krishna or Jesus, as comprising of all forms of Divinity. Do not argue that other forms are less and your form is greater. Be aware that every form of Divine is equally sweet.(Divine Discourse, Nov 25, 1964.)
ஜபம் மற்றும் தியானத்தைப் பித்துப் பைத்தியம் பிடித்தவர்களின் பொழுது போக்கு என்று கருதாதீர்கள்.அவற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அவை மட்டுமே, உங்களை அழிவில் இருந்து காப்பாற்ற முடியும். சில காசுகளுக்காகக் கடையில் வாங்கப்பட்ட பூக்களை அல்லாது, உங்களது நற்குணங்கள் என்ற மலர்களை இறைவனுக்கு அர்ப்பணியுங்கள்.ஆனந்தக் கண்ணீரே, நீங்கள் இறைவனது திருப்பாதங்களில் பொழிய விழையும் புனித நீராகட்டும். நீங்கள் போற்றும் இறை உருவம், அது ஹனுமானாகட்டும் அல்லது ஸ்ரீகிருஷ்ணராகட்டும் அல்லது ஏசுபிரானாகட்டும், அதுவே அனைத்து தெய்வீக ரூபங்களையும் தன்னுள் கொண்டது எனக் கருதுங்கள்.மற்றைய இறை ரூபங்கள் தாழ்ந்தவை, நீங்கள் ஆராதிக்கும் இறை ரூபமே உயர்ந்தது என வாதிக்காதீர்கள். ஒவ்வொரு இறை ரூபமும் சமமான இனிமை கொண்டவை என்பதை உணர்ந்திருங்கள்.