azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 01 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 01 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

The body is said to be the tabernacle of God. In fact the world itself is the body of God. A pinprick on the toe is immediately recognised as an injury to the self, because the toe is part of the self-same body. So too, suffering in one corner of the world is as much the concern of the Lord, as suffering in any other. The whole world is a mansion of the Lord. All countries and states are mere rooms in His mansion. Never forget that the whole world is a temple of the Lord; it is His body and He resides in it! (Divine Discourse, Jun 25, 1960.)
மனித உடலே இறைவன் உறையும் வாசஸ்தலம் எனப்படுகிறது.உண்மையில் இந்த உலகமே இறைவனது உடலைப் போன்றது. கால் கட்டை விரலில் ஏற்படும் ஒரு சிறிய முள் குத்துவது உடனேயே உடலுக்கே ஒரு காயமாக உணரப்படுகிறது, ஏனெனில், அந்தக் கட்டை விரலும் உடலின் ஒரு அங்கமே. எனவே, உலகில் ஒரு பாகத்தில் ஏற்படும் துயரம் வேறு எந்த இடத்திலும் ஏற்படும் துயரத்தைப் போல, அதே அளவு இறைவனது அக்கறைக்கு உட்பட்டதே. இந்த உலகனைத்தும் இறைவனது மாளிகையே. அனைத்து தேசங்களும், பிரதேசங்களும் அதன் அறைகளே.இந்த உலகே இறைவன் உறையும் ஆலயம்; அதுவே அவனது உடல் மேலும் அவன் அதில் வசிக்கிறான் என்பதை ஒரு போதும் மறந்து விடாதீர்கள்.