azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 30 Nov 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 30 Nov 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Spiritual Practice (Sadhana) must be done in a disciplined and systematic manner, in an atmosphere filled with virtues. Just as fans in a large hall cool the atmosphere and provide soothing breeze to the people gathered there, so too, the fans of Truth, Right Conduct, Peace and Love (Sathya, Dharma, Shanthi,andPrema) are necessary to reduce the sweltering heat of ignorance, falsehood, injustice and indiscipline (Ajnaana, Asathya, AnyaayaandAkrama). In a world where noble conduct is being insulted and denied at every turn, peace and tolerance are the only means through which you can save yourself. This is the most important aspect that I ask you to cultivate. In every act, have tolerance and patience with a mutual helping attitude. In the family, cultivate patience and mutual respect; in the community, have righteousness and justice.(Divine Discourse, Jun 25, 1960)
நற்குணங்கள் நிறைந்த சூழ்நிலையில், ஆன்மீக சாதனாவை கட்டுப் பாட்டுடனும், முறையாகவும் செய்ய வேண்டும். எவ்வாறு ஒரு பெரிய மண்டபத்தில் மின் விசிறிகள் குளிர்ச்சியைத் தந்து,அங்கு குழுமியுள்ள மனிதர்களுக்கு இதமான சூழ்நிலையைத் தருகின்றனவோ, அவ்வாறே சத்யம், தர்மம், சாந்தி, மற்றும் ப்ரேமை என்ற மின்விசிறிகள் அஞ்ஞானம், அசத்யம், அநியாயம் மற்றும் அக்ரமம் ஆகியவற்றின் புழுங்கும் சூட்டைத் தணிக்கத் தேவைப்படுகின்றன.சீரிய நடத்தை ,ஒவ்வொரு திருப்பத்திலும், அவமதிக்கப்பட்டு, மறுக்கப்படும் இவ்வுலகில் , சாந்தியும், சகிப்புத் தன்மையையுமே, நீங்கள் உங்களையே காப்பாற்றிக் கொள்வதற்கான வழிகளாகும். நான் உங்களை வளர்த்துக் கொள்ளச் சொல்லும் மிக முக்கியமான அம்சம் இதுவே ஆகும். ஒவ்வொரு செயலிலும்,பரஸ்பரம் உதவும் மனப்பாங்குடன், சகிப்புத் தன்மையையும், பொறுமையையும் கொண்டு இருங்கள். குடும்பத்தில் பொறுமையையும், பரஸ்பரம் மரியாதையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்; சமுதாயத்தில் தர்ம,நியாயங்களைக் கொண்டு இருங்கள்.