azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 25 Nov 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 25 Nov 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Just like a fish which can live only when it is immersed in water, when it feels the element all around it, so too man is a being that can live only when immersed inananda(bliss); one must have ananda not merely at home, in society and in the world but more than all, in the heart. As a matter of fact, theanandain the heart producesanandaall around; the heart is the spring of joy. That spring has to be touched by constant meditation, recitation and the intermittent dwelling on the glory, the grace and the inexhaustible manifestations of the Lord, that is,smarana,chethanaandmanana. Hold fast to the goal; the devotee should never turn back. Never give way to doubt or despair.(Divine Discourse, Nov 23, 1961.)
எவ்வாறு ஒரு மீன் தண்ணீரில் மூழ்கி, தன்னைச் சுற்றி அதை உணர முடிந்தால் மட்டுமே வாழ முடியுமோ, அவ்வாறே, மனிதனும் ஆனந்தத்தில் மூழ்கி இருந்தால் மட்டுமே வாழக்கூடிய ஒரு ஜீவனாவான்;ஒருவருக்கு ஆனந்தம், வீட்டில், சமுதாயத்தில் மேலும் இந்த உலகில் மட்டும் இருந்தால் போதாது; அவரது இதயத்திலும் இருக்க வேண்டும்.உண்மையில் இதயத்தில் இருக்கும் ஆனந்தமே தன்னைச் சுற்றிலும் ஆனந்தத்தைப் பரப்புகிறது; இதயமே ஆனந்தத்தின் ஊற்றாகும். அந்த ஊற்றினை, இறைவனது மஹிமை,அருள் மற்றும் குறைவே அற்ற அவனது அவதாரங்களை,இடையறாது தியானம் (ஸ்மரணா), ஜபம் (மனனா) மற்றும் நினைவு கூறுதல்(சேதனா) ஆகியவற்றின் மூலம் ,தொட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.அந்த இலட்சியத்தை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்; பக்தன் அதிலிருந்து விலகக் கூடாது. சந்தேகம் அல்லது விரக்திக்கு ஒரு போதும் இடம் கொடுக்காதீர்கள்.