azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 23 Nov 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 23 Nov 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Service is the highest penance and serving any living being is to serve Him. Many do acts of service as 'social service’, not as aSadhana(spiritual act). ThroughSeva Sadhana, Hanuman attained identity with Rama, just as the river attains identity with the sea. Arjuna too considered his every act asSadhanato attain Lord Krishna’s grace. He followed Krishna’s counsel, “Mamanusmara Yuddhyacha - fight, ever keeping Me in mind.” You too should keep God ever in your mind as the pace-setter for every task you do. Serve anyone in need with a full heart and experience the resultant joy. It may be small and even unnoticed by others, but must be done to please the God within you. Every act of genuineSevaattracts the Grace of God.(Divine Discourse, Nov 19, 1981.)
சேவையே மிகச் சிறந்த தவம்;எந்த ஜீவராசிக்கும் ஆற்றும் சேவை, இறைவனுக்கே செய்யப்படும் சேவையாகும்.பலர் சேவையை, ஆன்மீக சாதனையாக அல்லாது'' சமூக சேவையாகச்'' செய்கின்றனர்.சேவையாகிய சாதனையின் மூலம் ஹனுமான்,நதி எவ்வாறு கடலுடன் ஒன்றரக் கலக்கிறதோ, அவ்வாறு ஸ்ரீராமனும் ஐக்கியமானார்.அர்ஜூனனும் கூட தனது ஒவ்வொரு செயலையும்,ஸ்ரீகிருஷ்ண பகவானின் அருளைப் பெறுவதற்கான சாதனையாகக் கருதி, ஆற்றினான்.அவன்,ஸ்ரீகிருஷ்ணரின் போதனையான, ''மாமனுஸ்மர யுத்யஸ்ச'' -அதாவது என்னை மனதில் எப்பொழுதும் கொண்டு போராடுவாயாக என்பதைப் பின்பற்றினான்.நீங்களும்,உங்கள் மனதில் எப்போதும் இறை எண்ணத்தை, உங்களது ஒவ்வொரு செயலிற்கும் உத்வேகம் அளிக்கும் ஒன்றாகக் கொண்டு பணி ஆற்ற வேண்டும்.முழு மனதோடு, தேவைப் படும் எவருக்கும் சேவை ஆற்றுங்கள்;அதிலிருந்து பிறக்கும் ஆனந்தத்தை அனுபவியுங்கள்.அது மிகச் சிறிய செயலாகவோ அல்லது மற்றவர்களால் கண்டு கொள்ளப் படாததாகவோ இருக்கலாம்; ஆனால் உங்களுள் உள்ள இறைவனை மகிழ்விப்பதற்காக அது ஆற்றப் பட வேண்டும். ஒவ்வொரு உண்மையான சேவையும் இறைவனின் அருளை ஈர்க்கிறது.