azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 18 Nov 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 18 Nov 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

The hopes raised by the advances of science and technology have proved dupes. While science has overcome the barriers of time, distance and nationality, it has done little to promote better understanding between man and man, and nation and nation. However there are heartening signs that earnest seekers around the world are turning inward to find answers to this crisis. The oneness of all creation affirmed by the ancient seers must be expressed in transcendental love that embraces all people regardless of creed, community or language, to overcome this mammoth challenge. Never forget that the real source of happiness and bliss is the discovery of the true self (Atma) within yourself. All of you are essentially divine. Observe basic human qualities in daily living and raise yourself above the level of animals. (Divine Discourse, Aug 1981)
விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப முன்னேற்றங்கள் எழுப்பிய நம்பிக்கைகள் ஏமாற்றம் அளிப்பவையாக ஆகி விட்டன.விஞ்ஞானம், கால,தூர,தேச பரிமாணங்களைக் கடப்பதில் வெற்றி அடைந்தாலும், மனிதனுக்கும் மனிதனுக்கும், ஒரு நாட்டிற்கும் ,மற்றொரு நாட்டிற்கும் இடையே நட்புணர்வை மேம்படுத்துவதில் எள்ளளவும் உதவவில்லை. ஆனால்,இந்தப் பிரச்சனைக்கான விடையை தங்களுள்ளேயே காண, உலகனைத்தும் சாதகர்கள் விழைகிறார்கள் என்பதற்கான, மகிழ்ச்சி தரும் அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த மிகப் பெரிய சவாலை சமாளிக்க, பண்டைய முனிவர்கள் உறுதி செய்த, சிருஷ்ட்டியின் ஒருமையை, குல, மத மற்றும் மொழி வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களையும் அரவணைத்து, அனைத்தையும் கடந்து நிற்கும் அன்பாக வெளிப்படுத்த வேண்டும். உண்மையான சந்தோஷம் மற்றும் ஆனந்தத்தின் மூலாதாரம், உங்களது உண்மை இயல்பான ஆத்மாவை, உங்களுள் உள்ள உங்களுள் கண்டு பிடிப்பதே என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.நீங்கள் அனைவரும் இயல்பில் தெய்வீகமானவர்களே.தினசரி வாழ்க்கையில் மனிதப் பண்புகளைக் கடைப்பிடித்து, மிருக நிலையிலிருந்து உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள்.