azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 16 Nov 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 16 Nov 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

You may sometimes feel you are a sinner, and are essentially wicked. But if someone were to think like you and calls you “Hello sinner!”, you will resent it! Why? Because, your real nature is purity, peace and joy. You are divine. You are a manifestation of God! Your mind, intellect, memory, egoism and the senses (Manas, Buddhi, Chitha, Ahamkara, Indhriyas) are like the bricks, iron rods, cement and wood that go up to make a house for your soul to live in. They are not you; the real you is the Divine Soul (Atma). You will truly appreciate this only by constant meditation, moving in good company, listening to the talks of the realised ones, and by following certain prescribed course of discipline. That is why I lay so much emphasis on discipline.(Divine Discourse, Nov 25, 1964.)
நீங்கள் சில சமயம்,நீங்களே பாவிகள் என்றோ தீயவர்களே என்றோ எண்ணலாம். ஆனால் யாராவது உங்களை அவ்வாறே கருதி,உங்களை, ''ஏ பாவியே '' என்று கூப்பிட்டால்,நீங்கள் எரிச்சல் அடைவீர்கள் ! ஏன்? ஏனென்றால், உங்களது உண்மையான இயல்பு தூய்மை,சாந்தி மற்றும் சந்தோஷமே. நீங்கள் தெய்வீகமானவர்கள்.நீங்கள் இறைவனின் ஒரு அவதாரமே. உங்களது மனம்,புத்தி,சித்தம்,அஹங்காரம் மற்றும் இந்திரியங்கள், உங்களது ஆன்மா குடி இருக்கும் வீட்டைக் கட்டுவதற்குத் தேவையான செங்கல்,இரும்புக் கம்பி,சிமெண்ட் மற்றும் மரம் போன்றவை.நீங்கள் அவைகள் அல்ல;உங்களது உண்மை நிலை தெய்வீக ஆத்மாவே.இடையறாத தியானம், நல்லோர் குழுவில் இருத்தல்,தன்னை உணர்ந்தவர்களின் உரைகளைக் கேட்டல்,மற்றும் அறிவுறுத்தப் பட்ட குறிப்பிட்ட கட்டுப்பாடுகளைக் கடைப் பிடித்தல், ஆகியவற்றின் மூலம் தான் இதை நீங்கள் உண்மையில் பாராட்ட முடியும். அதனால் தான் நான், ஒழுக்கக் கட்டுப்பாட்டை அவ்வளவு வலியுறுத்துகிறேன்.