azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 13 Nov 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 13 Nov 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Spiritual knowledge cleanses the mind and helps us undertake good actions. But that is not enough. The heart also should be pure. In the absence of purity of heart, there can never be purity of the mind and intellect. We should not give scope to the creepers of bad qualities to entangle the heart. A creeper that goes around covering the tree ultimately smothers the tree itself. One should ensure that the creepers of lust, anger, greed, and infatuation do not get entangled to one’s own Self. The society will ultimately value purity of heart more than all other achievements. One can escape from the house on fire, but not from the senses which are ignited by the fire of evil qualities. It is the foremost duty of every individual to keep their senses under control. (Divine Discourse, Nov 19, 1998)
ஆன்மீக ஞானம் மனதைத் தூய்மைப் படுத்தி, நாம் நற்பணிகளைச் செய்ய உதவுகிறது. ஆனால் அது போதுமானதல்ல.இதயமும் தூய்மையாக இருக்க வேண்டும்.இதயத்தூய்மை இல்லாமல் மனத்தூய்மையும்,புத்தித் தூய்மையும் ஒருபோதும் இருக்க முடியாது. தீய குணங்கள் என்ற கொடிகள் இதயத்தைப் பின்னிப் பிணைய நாம் வாய்ப்பு அளிக்கக் கூடாது.மரத்தைச் சுற்றிப் படரும் கொடி இறுதியில் அந்த மரத்தையே சின்னா பின்னமாக்கி விடுகிறது.ஒருவர், தன்னை, காமம்,க்ரோதம்,மோஹம்,லோபம் எனும் விஷக் கொடிகள் பிணைத்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இந்த சமுதாயம், இதயத் தூய்மையே, பிற அனைத்து சாதனைகளை விட,உயர்ந்ததாக மதிக்கும். ஒருவர் தீப்பிடித்த வீட்டை விட்டுக் கூட வெளியே வந்து விடலாம்; ஆனால் தீய குணங்களால் கொழுந்து விட்டு எறியும் புலன்களிலிருந்து தப்ப முடியாது.ஒவ்வொரு மனிதரும் தங்களது புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது தலையாய கடமையாகும்.