azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 11 Nov 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 11 Nov 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Have the progress of your country, your duty (Dharma) and your innate Divinity (Atma) before your mind’s eye at all times. Let your hunger for serving these three, grow more and more. Then your education will serve its purpose and give you a sense of mission and fulfillment. You will naturally acquire respect for elders, faith in your own Self, fear of sin, and fear of going against the voice of God present within you. Never cross this line – Do not do anything which brings tears in the eyes of your parents. Honour them and obey them. Do not condemn them as old-fashioned. Remember the adage, “Old is Gold”. Your parents can guide you; they can share with you their experience of the world and its tricks, and you will benefit from them.(Divine Discourse, Nov 25, 1959.)
உங்களது தேசத்தின் முன்னேற்றம்,உங்களது தர்மம் மற்றும் உங்களது ஆத்மா ஆகியவற்றை, எப்போதும் மனக் கண்களில் வைத்திருங்கள்.இந்த மூன்றிற்கும் சேவை செய்வதற்கான உங்களது தாபம் மேலும் மேலும் பெருகட்டும். பின்னரே, உங்களது கல்வி,தனது நோக்கத்தைப் பூர்த்தி செய்கிறது; உங்களுக்கு மிகப் பெரிய இயக்கத்தை ஆற்றிய மற்றும் திருப்தி அளிக்கும் உணர்வு ஏற்படும். பெரியவர்களிடம் மரியாதை,தன்னம்பிக்கை, பாவம் செய்வதற்கு அஞ்சுதல்,உங்களுள் இருக்கும் இறைவனது குரலுக்கு எதிராகச் செல்வதில் அச்சம்,ஆகியவற்றை நீங்கள் இயல்பாகவே பெறுவீர்கள்.இந்தக் கோட்டை ஒருபோதும் தாண்டாதீர்கள்-அதாவது,உங்களது பெற்றோர்களின் கண்களில் கண்ணீர் வருமாறு செய்யும் எந்தச் செயலையும் செய்யாதீர்கள். அவர்களைப் போற்றி, அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்.அவர்களைப் பழமைவாதிகள் எனத் தூற்றாதீர்கள். ''OLD IS GOLD" ( பழமையானதே விலைமதிப்பற்றது) என்ற பழமொழியை மறக்காதீர்கள். உங்களது பெற்றோர்கள் உங்களை வழி நடத்த முடியும்;இந்த உலகம் மற்றும் அதன் சூழ்ச்சிகளைப் பற்றிய அவர்களது அனுபவங்களை அவர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்; அவற்றால் நீங்கள் பயனடைவீர்கள்.