azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 07 Nov 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 07 Nov 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

The body is the instrument for doing your duties (Karma) and your intellect (Buddhi) is shaped by your Karma. Prayer and meditation will purify your intellect and make it an effective instrument to win the Lord’s Grace and for self-realization. The warmth of Divine Grace will melt all ignorance away. You can win it by engaging yourself in good deeds. Do your duties that you are best fitted for; that which you are ordained for, your Swadharma. God incarnates for teaching people to perform their dharma (duty). He corrects the Buddhi through counsel and command; at times condemning but also by being a close friend and well-wisher, so that people would willingly give up evil propensities and recognize the straight path. Tread the noble path and attain self-realization. (Divine Discourse, Nov 23, 1964)
உடல் ,கர்மாவை செய்வதற்கான கருவி;உங்களது புத்தி,உங்களது கர்மாவினால் உருவாகக்கப் படுகிறது.பிரார்த்தனையும்,தியானமும், உங்களது புத்தியை தூய்மைப் படுத்தி, அதனை,இறைவனது அருளைப் பெறுவதற்கும் மற்றும் ஆத்ம சாக்ஷாத்காரத்தை அடைவதற்கும் ஆன திறன் கொண்ட கருவியாக மாற்றும்.இறை அருளின் இதமான வெப்பம் அனைத்து அறியாமைகளையும் உருக்கி ,நீக்கி விடும்.நற்கருமங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் அதனை நீங்கள் வெல்லலாம். ஸ்வதர்மத்தை -அதாவது உங்களுக்கு என்றே விதிக்கப் பட்ட,உங்களுக்கு மிகவும் பொருத்தமான கடமைகள்- ஆற்றுங்கள். இறைவன் மனிதர்கள் தங்களது தர்மத்தைக் கடைப்பிடிக்கக் கற்றுக் கொடுப்பதற்காகவே அவதாரம் எடுக்கிறான்.மனிதர்கள் தங்களது தீய குணங்களை,விரும்பி விடுத்து, நேரான பாதையைப் புரிந்து கொள்வதற்காக, அவன் ஆலோசனை மற்றும் ஆணைகளால் புத்தியை சரி செய்கிறான்;சில சமயங்களில் கண்டித்தும்,ஆனால் அதே சமயத்தில் நெருங்கிய நண்பனாகவும், நலவிரும்பியாகவும் இருக்கிறான். சீரிய பாதையில் நடந்து, ஆத்ம சாக்ஷாத்காரத்தைப் பெறுங்கள்.