azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 29 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 29 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

There are greater things in life that grant joy and peace – try to get a hold of them. Each and every one of you have earned the right to live in joy and possess these greater things – no one can take these away from your grasp. Fix your attention on the eternal values, and then you will not be swept off your feet by gusts of passion or fits of fury. In the past, sages and saints controlled the vagaries of their minds and dwelt in peace and bliss. You too must ensure that the temple of the Lord in your innermost heart is not overwhelmed by the sands of lust and anger (KamaandKrodha). When all live in this manner, the community will become an ideal one.(Divine Discourse, Sep 9, 1959.)
வாழ்க்கையில் சாந்தி,சந்தோஷங்களைத் தர வல்ல பல சிறந்த விஷயங்கள் உள்ளன-அவற்றை இறுகப் பற்றிக் கொள்ள முயலுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சாந்தி, சந்தோஷங்களுடன் வாழ்ந்து,இந்தச் சிறந்த விஷயங்களைப் பெறுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளீர்கள் எவரும் இவற்றை உங்களிடமிருந்து பிடுங்கி எடுத்துச் செல்ல முடியாது. ஸனாதனமான மனிதப் பண்புகளில் உங்களது கவனத்தை நிலை கொள்ளச் செய்யுங்கள்; பின்னர் பேரார்வம் அல்லது ஆத்திரத்தின் பலமான காற்றால் நீங்கள் அடித்துச் செல்லப் பட மாட்டீர்கள். பண்டைய காலத்தில் முனிவர்களும், சான்றோர்களும் அவர்களது அலைபாயும் மனங்களைக் கட்டுப்படுத்தி, சாந்தி மற்றும் ஆனந்தத்தில் திளைத்திருந்தார்கள். நீங்களும் உங்களது இதயக் கருவறையில் உள்ள இறைவனது ஆலயம் காம,க்ரோதங்கள் என்ற மணலால் ஆக்கிரமிக்கப் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அனைவரும் இவ்வாறு வாழும் போது, அந்த சமூகமே தலை சிறந்து விளங்கும்.