azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 28 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 28 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

You will have faith in God when you have yourself discovered that this Universe must have a Creator and Protector who runs the show. To firmly grasp that idea, your heart must be very pure, your mind must be clear. To achieve this, performing your ordained duties (karma) sincerely is very essential. The scriptures delve in a detailed manner the methods to perform one’s duties. Of the hundred parts in the Vedas, 80 are for Duty (Karma), 16 for Worship (Upasana) and four for Wisdom(Jnana). Wisdom is the final destination in the journey. Karma has to be done in order to educate the impulses and train your feelings. Then you develop the attitude of upasana, of humility before the great Unknown, and finally, you realise that the only reality is you, which is the same as He.(Divine Discourse, Nov 23, 1964.)
இந்தப் பிரபஞ்சத்தை சிருஷ்டித்து,காத்து, நடத்துபவர் ஒருவர் இருந்தே ஆக வேண்டும் என்பதை நீங்கள் கண்டு பிடித்து விட்டீர்கள் என்றால்,உங்களுக்கு இறைவன் பால் நம்பிக்கை வந்து விடும்.இந்தக் கருத்தை உறுதியாகப் புரிந்து கொள்ள,உங்கள் இதயம் மிகவும் தூய்மையாகவும்,உங்கள் மனம் மிகத் தெளிவாகவும் இருக்க வேண்டும். இதைப் பெறுவதற்கு,நீங்கள் உங்களது கர்மாவை உளமாறச் செய்வது மிகவும் அவசியம்.சாஸ்திரங்கள், ஒருவர் தனது கர்மாவை ஆற்றவேண்டிய முறைகளை, விவரமாக விளக்குகின்றன. வேதங்களின் நூறு பாகங்கள் கர்மாவுக்காகவும், 16 பாகங்கள் உபாஸனைக்காகவும், 4 பாகங்கள் ஞானத்திற்காகவும் அமைக்கப் பட்டுள்ளன. ஞானம் என்பது இந்தப் பயணத்தின் இறுதி நிலை.உந்துதல்களை அறிவுறுத்தவும், உணர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கவும், கர்மாவை செய்தே ஆக வேண்டும். பின்னர் உபாஸனை மனப்பாங்கையும், அறிவுக்கு எட்டாத பரப்பரம்மத்தின் முன்னால் பணிவையும் நீங்கள் வளர்த்துக் கொள்கிறீர்கள்; இறுதியாக, சத்தியமான ஒன்று நீங்களே தான் என்பதையும்,இறைவனும் நீங்களும் ஒன்றே என்பதையும் உணர்வீர்கள்.