azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 20 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 20 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

People suffer from two types of ills – physical and mental. Physical ailments are caused by the dis-equilibrium of the three tempers ofVata, PitthaandSleshma(air, bile and phlegm) and mental illnesses are caused by the dis-equilibrium of the three qualities of serenity, passion and inertia (Sattwa, RajasandTamas). One unique fact about these two types of illnesses is that the cultivation of virtue cures both the diseases. Physical health and mental health are interrelated. Physical health is a prerequisite for mental health and good mental health ensures physical well-being. An attitude of generosity, of fortitude in the presence of sorrow and loss, a spirit of enthusiasm to do good, and to be of service to the best of one’s capacity - these build up the mind as well as the body. The sheer joy derived from service reacts on the body and makes you free from diseases.(Divine Discourse, Sep 9, 1959)
மனிதர்கள் இரண்டு விதமான,அதாவது- உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட- வியாதிகளால் அவஸ்தைப் படுகிறார்கள்.உடல் சம்பந்தப் பட்ட வியாதிகள், வாதம்,பித்தம்,மற்றும் சிலேக்குமம் என்ற மூன்றின் சமநிலை பாதிப்பினாலும், மனோ வியாதிகள் ஸத்வ,ரஜ மற்றும் தமோ குணங்களின் சமநிலை பாதிப்பினாலும் ஏற்படுகின்றன.இந்த இரண்டு வியாதிகளின் ஒரு தனிச் சிறப்பு என்ன என்றால்,நல்லொழுக்கங்களை வளர்த்துக் கொள்வது,இந்த இரண்டு விதமான வியாதிகளையும் குணப்படுத்தி விடுகிறது.உடல்நலமும்,மனோநலமும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவை. மனோநலத்திற்கு, நல்ல உடல்நலம் இருந்தாக வேண்டும்; நல்ல மனோ நலம்,நல்ல உடல்நலத்தை உறுதி செய்கிறது. பெருந்தன்மையான மனப்பாங்கு, லாப, நஷ்டங்களை சமமாக எதிர்கொள்ளும் மனவலிமை, நற்செயல்கள் ஆற்றுவதிலும்,தனது திறனுக்கு ஏற்றபடி சமுதாயத்திற்கு சேவை ஆற்றுவதிலும் உற்சாகம்-இவை உடல் மற்றும் மனதை வலுப்படுத்துகின்றன. சேவையினால் கிடைக்கும் ஆனந்தம் உடலில் செயலாற்றி,உங்களை நோயற்றவர்களாக ஆக்கி விடுகிறது.