azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 15 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 15 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Every one of you must fit in with the Divine Plan. Strive to know its main principles and be equipped for the tasks He allots to you. Give your heart completely to the duty assigned to you in life. Be ever vigilant of your own nature and duty (swadharma) and engage in the tasks that your role demands. To attain the Divine, you have to climb from the animal state to the human state and from human level to Divinity. This climb is hard given the several forces that are always around you, ready to pull you downward. The engine in the car if clogged and worn out, will whine and groan when it has to ascend a steep hill. On the other hand if it is well-maintained, free from the dust and dirt of sensory yearning, then it will ascend heights very easily.(Divine Discourse, Oct 15, 1964.)
இறைவனது தெய்வீகத் திட்டத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் இடம் பெற வேண்டும்.அதன் முக்கியக் கோட்பாடுகளை அறிந்து கொள்ள பாடுபடுங்கள்;அவன் உங்களுக்கு அளிக்கும் பணிகளுக்கு உங்களைத் தயார் படுத்திக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் உங்களுக்கு என்று கொடுக்கப் பட்டுள்ள கடமையில் இதய பூர்வமாக செயலாற்றுங்கள்.உங்களது இயல்பு மற்றும் ஸ்வதர்மத்தைப் பற்றி மிகுந்த கவனத்துடன் இருங்கள்;உங்களது பாத்திரத்திற்குத் தேவையான செயல்களில் ஈடுபடுங்கள்.தெய்வீக நிலையை அடைய, நீங்கள் மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு ஏறி,மனித நிலையிலிருந்து தெய்வீக நிலைக்கு உயர வேண்டும். உங்களைச் சுற்றி, உங்களைக் கீழே இழுத்து விடத் தயாராக பல சக்திகள் இருப்பதால்,இந்த ஏற்றம் கடினமானதே.காரில் உள்ள எஞ்சின் அடைத்துக் கொண்டு,தேய்ந்து போய் இருந்தால், செங்குத்தான பாதையில் ஏறும்போது,மிகவும் திணறும். அதே சமயம், அது சீராக , புலனின்ப ஆசைகள் என்ற தூசி,துரும்புகள் இன்றி பராமரிக்கப் பட்டிருந்தால், எளிதாக உயரமான பாதையில் ஏறி விடும்.